தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் புது கிருபைகளால் நிரப்பப்பட வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் கிறிஸ்து நம்முடைய உள்ளான மனுஷனில் எல்லாவற்றிற்கும் எல்லாவுமாக மகிமையாக வெளிப்படுகிறார் என்பதன் திருஷ்டாந்தம் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
நெகேமியா 13:1-7
அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால்,
அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.
ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.
இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து,
முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான்.
இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு,
எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.
மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் யூதா ஜனங்கள் தங்கள் பங்கை கர்த்தருக்கென்று காணிக்கையாக பிரதீஷ்டை பண்ணின அன்றைய தினம் ஜனங்கள் கேட்கும்படி மோசேயின் புஸ்தகத்தை வாசித்ததில் அம்மோனியரும், மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும், தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டு வராமல், அவர்களை சபிக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் பிலேயாமை கூலிப்பொருத்திக் கொண்டபடியினால், அவர்கள் சாபத்தை என்றைக்கும் ஆசீர்வாதமாக திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்கு உட்படலாகாது என்று எழுதியிருந்தது. அதனை அவர்கள் கேட்டபோது பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலை விட்டு பிரித்து விட்டார்கள். மேலும் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கபட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோட சம்பந்தங்கலந்தவனாயிருந்து அவனுக்கு ஒரு பெரிய அறையாகிய
நெகேமியா 13:8
அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.
மேற் குறிக்கபட்டவைகள் வைக்கபட்ட அறையை நெகேமியா இல்லாதபோது தொபியாவுக்கு ஆயத்தம் பண்ணபட்டதாயிருந்தது. பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டா ராஜாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே ராஜாவினிடத்தில் போய் உத்தரவு பெற்றுக்கொண்டு நெகேமியா எருசலேமுக்கு வரும் போது, இந்த பொல்லாப்பை அறிந்துக்கொண்டதினால், மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டிலுள்ள தட்டுமுட்டுகளையெல்லாம் அறையிலிருந்து வெளியே எறிந்து விட்டு, அறை வீடுகளை சுத்திகரித்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் எல்லாம் திரும்ப கொண்டு வைக்கப்பட்டது.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களில் நாம் தியானிக்கையில் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கியது என்னவென்றால், நம்மில் அநேகருடைய உள்ளமானது முழுமையான இரட்சிப்பை சுதந்தரியாமல் மோவாபிய அம்மோனியரின் கிரியைகள் நிறைந்திருக்கிறதினால் அவர்கள் இஸ்ரவேல் சபையாகிய கிறிஸ்துவின் உபதேசத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாததினால் அவர்களை கர்த்தர் இஸ்ரவேல் சபையை விட்டு விலக்குவார். ஆனால் சில பேர்கள் தங்கள் உள்ளமாகிய அறைகளுக்குள் தொபியாவின் கிரியைகளுக்கு இடம்கொடுப்பதை அறிகிற தேவன், அவருடைய பரிசுத்த பொருட்களை அசுசிபடுத்தும் போது அவனுடைய வீட்டின் பணி முட்டுகளாகிய அருவருப்புகளை கிறிஸ்து நம் உள்ளத்தை விட்டு அகற்றும் போது, கர்த்தரின் புது கிருபைகளால் தேவனுடைய ஆலயமாகிய நம் உள்ளத்தை கர்த்தர் நிரப்புகிறார். நாமும் நம்மில் இவ்வித அருவருப்புகள் இருக்குமானால் அதனை அகற்றி, புது கிருபைகளால் கர்த்தர் நம்மை நிரப்பும் படியாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.