தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11 சாமுவேல் 22:2,3 

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.

தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மகிமையோடு கர்த்தரை ஆராதிக்கும் போது கிறிஸ்துவின் களிகூருதல் நமக்குள் கேட்கப்படும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் நித்திய ஜீவனை இழந்து விட்டோமானால் மீண்டும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

நெகேமியா 12:38-43 

துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,

எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.

அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,

பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,

மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.

அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்தியது என்னவென்றால் கிறஸ்துவாகிய வாசலுக்குள் நாம் பிரவேசித்து, அவர் நமக்கு தந்திருக்கிற பன்னிரண்டு வகை வாசலாகிய மகிமை நிறைந்த நற்கிரியைகளோடு நாம் வாழ்வது மிக முக்கியமான காரியம்.  அதென்னவென்றால் கடைசியாக அலங்கம் கட்டினவர்கள் பதினொன்று வாசலுக்குள் பிரவேசித்து காவல் வீட்டு வாசலிலே போய் நின்றார்கள். அப்போது தான் கிறிஸ்து நமக்கு கோட்டையும் அரணும், காவலுமாக விளங்குகிறார் என்பது திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  அப்படியாக நாம் கர்த்தரை பாடி துதி செய்து தேவனுக்கு ஸ்தோத்திரபலி செலுத்துகையில் கர்த்தர் சத்துருவை ஜெயித்து நமக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்குகிறதால் நாம் மகிச்சியாயிருப்போம். அதுமட்டுமல்லாமல் எல்லாரும் கத்தருக்குள் களிகூரமுடியும்; அப்போது நமக்குள் கிறிஸ்துவின் களிகூருதல் தூரத்தில் உள்ளவர்களுக்கும் கேட்க முடியும்.  இவ்விதம் கிறிஸ்து நம்மில் களிகூரும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.