தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நெகேமியா 8:10
பின்னும் அவன்
அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப்
பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்;
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய
பெலன் என்றான்.
கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.
சண்டைப்போடுதல் நமக்குரியதல்ல:-
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்த வேத பகுதிகளை ஒன்று ஞாபகத்தில் கொண்டு
வருவோம். முந்தின நாளில் மோசே நாணற் பெட்டியுடன் காக்கப்படுகிறது நம் ஆத்துமா எவ்விதம்
பார்வோனுடைய கடின இதயத்திலிருந்து காக்கப்படவேண்டும், உலகமாகிய பொல்லாங்கானுக்குள்
விழுந்து அழிந்து போகாதபடி தேவன் நம் ஆத்மாவை காக்கிறார் என்பதை திருஷ்டாந்தத்தோடு
விளக்கிக் காட்டுகிறார்.
மேலும் கழிந்த
நாளில் மோசேயை, அதின் தாய் வந்து வளர்ப்பதற்காக தேவன் செய்கிற ஒரு பெரிய காரியம் அங்கு
காணப்படுகிறது. என்னவென்றால் பார்வோனின் குமாரத்தியினிடத்தில் ,மோசேயின் தமக்கை, குழந்தைக்கு
பால் கொடுக்கும் படியாக எபிரெய ஸ்திரீயில் ஒருத்தியை அழைத்து வருகிறதை பார்க்கிறோம்.
ஆனால் அது அந்த குழந்தையின் தாயாக இருக்கிறாள். ஆனால்,
யாத்திராகமம் 2:9
பார்வோனுடைய
குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை எனக்கு வளர்த்திடு,
நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு
போய், அதை வளர்த்தாள்.
பிரியமானவர்களே
குழந்தை பார்வோனின் குமாரத்தியினிடம் கிடைத்தாலும், குழந்தையின் உண்மையான தாயே அந்தக்
குழந்தையை வளர்ப்பதற்காக ஒப்புக்கொள்கிறார். நாம் ஒன்று சிந்திக்கவேண்டும் தேவன் நம்மிடத்தில்,
நம் முற்பிதாக்கள் மூலம் சில நோக்கங்கள் வைத்திருப்பார்.
அந்த நோக்கத்தை எவ்வித தருணம் நமக்கு வந்தாலும், தீமை அணுகிக் கொண்டிருந்தாலும், தேவன்
தீமைக்கு ஒப்புக்கொடுக்காதபடி அந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறவராக காணப்படுகிறார்.
மோசேயாகிய பிள்ளை
வளர்ந்து பெரிதான போது அவள் அதை பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டு போய் விட்டாள்.
அவளுக்கு அவன் குமாரனானான். அவள் அவனை ஜலத்தினின்று
எடுத்தேன் என்று சொல்லி மோசே என்று பெயரிட்டாள்.
யாத்திராகமம்: 2:11-12
மோசே பெரியவனான
காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமை சுமக்கிறதைப் பார்த்து, தன்
சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
அங்கும் இங்கும்
பார்த்து, ஒருவரும் இல்லையென்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்
போட்டான்.
பிரியமானவர்களே
கழிந்த நாட்களில் நாம் தியானித்ததான வேத பகுதியில் எபிரெயரை எகிப்திற்கு அனுப்பியதின்
முகாந்தரத்தில் ஒன்று எகிப்தியனை நியாயந்தீர்ப்பதற்காக.
அதென்னவெனில்
நம் உள்ளத்தில் இருக்கிற எகிப்தின் கிரியை (உலகத்தின் கிரியையாகிய பல்வேறு பாவ கிரியைகள்)
அழிக்கப்பட வேண்டும். இதற்கு தான் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
மோசே பெரியவனான
போது எகிப்தியனாகிய ஒருவன் எபிரெயரில் ஒருவனை அடிக்கிறதைக் கண்டு எகிப்தியனை வெட்டி
மணலிலே புதைத்து போடுகிறான்.
இதனை வாசிக்கிற
பிரியமானவர்களே தேவன் நம் உள்ளத்தில் இருக்கிற எகிப்தின் செயல்களை அழிக்க வேண்டும்
என்பதற்காகவே திருஷ்டாந்தப் படுத்துகிறார்.
பின்பு ஒரு
நாள் எபிரெயர் மனுஷர் இருவர் சண்டை பண்ணிக் கொண்டிருக்கும் போது, அநியாயம் செய்கிறவனை
நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான்.
அதற்கு எபிரெயரில்
ஒருவன் உன்னை அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் எங்கள் மேல் ஏற்படுத்தினவன் யார்?
நீ எகிப்தியனை கொன்று போட்டது போல் என்னையும் கொன்று போட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது
மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.
யாத்திராகமம் 2:15
பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது,
மோசேயைக் கொலை செய்ய வகை தேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில்
போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான்.
எபிரெயர் சண்டை
பண்ணுவது தேவனுக்கு பிரியமில்லாத காரியம். ஏனெனில் இஸ்ரவேலர் எல்லோரும் ஊழியக்காரர்கள்.
லேவியராகமம்: 25:55
இஸ்ரவேல் புத்திரர்
என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே;
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
சண்டைப்பண்ணுதல்
இஸ்ரவேலருக்குரியதல்ல.
II தீமோத்தேயு: 2:22-26
புத்தியீனமும்
அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.
கர்த்தருடைய
ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும்,
தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
எதிர்பேசுகிறவர்கள்
சத்தியத்தை அறியும்படி ,தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,
பிசாசானவனுடைய
இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன்
கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
மேலும், கடைசிநாட்களில்
கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
பிரியமானவர்களே
சண்டைப்பண்ணுதல் தேவனுடைய பிள்ளைகளுக்கு உரியதல்ல. இந்த வேளையில் இந்த வார்த்தைகளை
வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்க்கையில்
குடும்பத்துக்குள்ளேயும் பிறரிடத்திலேயும், யாரிடமும் எந்த சூழ்நிலையிலும் சண்டை பண்ணாமல்,
எந்த எதிர் வார்த்தைகள் வந்தாலும், நாம் அதனை பொறுமையோடு சகிப்போமானால், தேவன் நம்மை
நேசிக்கிறவராயிருக்கிறார்.
ஏனென்றால் தேவனுடைய
கற்பனையில் ஒன்று நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே, எந்த தருணத்திலும்
தீமையை சகிக்கிறவராக இருக்க வேண்டும். இது தான் தேவன் நமக்கு காட்டின வழி என்பதை நாம்
எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைதான்,
நீதிமொழிகள் 17:1
சண்டையோடு கூடிய
வீடு நிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும்
துணிக்கையே நலம்.
நீதிமொழிகள் 21:19
சண்டைக்காரியும்
கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப் பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது
நலம்.
ஏனென்றால்,
I யோவான்: 4:21
தேவனிடத்தில்
அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே
பெற்றிருக்கிறோம்.
இதைத்தான் மோசேயை
வைத்து நமக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
ஆதலால் பிரியமானவர்களே
நம்முடைய குற்றங்களை தேவனுடைய சமூகத்தில் அறிக்கை செய்து பாவ மன்னிப்பை பெற்றுக் கொண்டு
தேவ சித்தம் செய்து ஆசீர்வாதங்களை சுதந்தரிப்போம். ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.