தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 10:17
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வழிகாட்டுகிற பாதையில் நடப்போம், சபையாம் ஜனங்களையும் நல்ல பாதையில் நடத்த வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தன்னை தான் நீதிமான் என்று கருதக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 31:1-8
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
மேற்கூறபட்ட வசனங்களில் பின்னும் யோபு கூறிய வார்த்தைகள் என்னவென்றால் தன்னுடைய கண்களோடே உடன்படிக்கை பண்ணி எந்த கன்னிகையையும் நினைக்கவில்லை என்றும், அதற்கு எனக்கு உன்னதத்திலிருந்து வரும் பங்கு கிடைக்க வில்லை என்றும்; தான் மாறுமாடாய் நடக்க வில்லை என்றும்; அவனுடைய வழிகளை எல்லாம் கர்த்தர் எண்ணுகிறார் என்றும்; தான் மாயையை பற்றிக்கொண்டு நடக்கவில்லை என்றும்;அவன் கால் யாருக்கும் கபடு செய்ய தீவிரித்ததில்லை என்றும்; கர்த்தர் சுமுத்திரையான தராசிலை தன்னை நிறுத்து, தன்னுடைய உத்தம குணத்தை அறிந்துக் கொள்ளட்டும் என்றும்; அவனுடைய நடைகள் கர்த்தரின் வழிகளை விட்டு விலகினதும்; தன்னுடைய இருதயம் கண்களை பின்தொடர்ந்ததும்; எந்த மாசுகளும் அவன் கைகளில் ஒட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறி; இந்த காரியங்களில் ஏதாகிலும் குற்றங்கள் என்னிடத்தில் உண்டானால்; நான் விதைத்ததை வேறொருவன் புசிக்கட்டும் என்றும்; தன் பயிர் வேரற்று போகக் கடவது என்கிறான்.
பிரியமானவர்களே, யோபு கூறிய இந்த வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று கொடுக்கப்படுகிறது. மேலும் கூறப்பட்ட கருத்துக்கள் ஒரு கர்த்தரின் ஊழியக்காரர்கள் ஒவ்வொன்றாக வரிசையாக கடைபிடிக்க வேண்டும். அவனில் தேவனுடைய செயலுக்கு மாறான காரியங்கள் இருக்கக்கூடாது. ஆதலால் இதனை வாசிக்கிற கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே கர்த்தரின் வேலை செய்கிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையோடும், எச்சரிப்போடும் நடந்து, சபையாம் ஜனங்களை இந்த நல்ல கிரியைகளை செய்து நடக்க கற்றுக்கொடுக்க வேண்டும்; கற்றுக்கொடுத்தால் போதாது, நல்ல வழியில், தான் நடப்பதும் அவர்களை நடத்துகிறவர்களாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, யோபின் வாழ்வில் வந்த கஷ்டத்தை நாம் நினைத்து நம்மை சுத்திகரித்து, அவர் சித்தம் நடக்கும்படியாக யாவரும் ஒப்பக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.