தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 2:6

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் நம்முடைய செய்கைக்கு தக்க பலனைக் கொடுப்பார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவன் நமக்கு தருகிற தண்டனையை ஏற்றுக்கொண்டு இரட்சிப்பை சுதந்தரித்து கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 34:1-6 

பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.

வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.

நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.

யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும்,

நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.

மேற்கூறபட்ட வசனங்களில்; பின்னும் எலிகூ மாறுத்தரமாக, ஞானிகளே, என் வார்த்தைகளை கேளுங்கள், அறிவாளிகளே எனக்கு செவிக்கொடுங்கள் என்று சொல்லி கூறுகிற வார்த்தைகளாவன: வாயானது போஜனத்தை ருசிப்பார்க்கிறது போல, செவியானது வார்த்தைகளை சோதித்து பார்க்கிறது. நமக்காக நியாயமானதை தெரிந்து கொள்வோமாக என்று நமக்குள்ளே அறிந்துக் கொள்வோமாக என்கிறான்.  பின்னும் அவன் சொன்னது யோபுவை குறித்து நான் நீதிமான் என்றும், தேவன் என் நியாயத்தை தள்ளிவிட்டார் என்றும், நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யெனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும் அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறது என்று யோபு சொன்ன வார்த்தைகளினால், எலிகூ யோபுவை குறித்து சொல்வது 

யோபு 34:7-11 

யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,

அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?

எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.

ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.

மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.

மேற்கூறபட்ட வார்த்தைகளில்  யோபுவிடத்தில் தண்ணீர் குடிக்கிறது போல் பரியாசம் பண்ணுதல் இருக்கிறது என்றும்; அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு துன்மார்க்கரோட திரிகிறவன் என்றும் யோபு கூறிய தேவனுடைய செயலுக்கு மாறாக பேசிய  வார்த்தைகளையும் எடுத்துக்கூறி அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வ வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.  ஆதலால் மனுஷனுடைய செய்கைக்கு தக்கதை மனுஷனுக்கு சரிகட்டி, அவனவன் நடத்தைக்கு தக்கதாக பலனளிக்கிறார் என்கிறான்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகளை தியானிக்கும் போது நாமும் இப்படியே தான் தன்னை தான் நீதிமானென்று எண்ணிக் கொள்கிறோம். ஆதலால் நம்மிடத்தில் நியாயம் உண்டு என்று எண்ணிக்கொள்கிறதால்,நாம் கர்த்தருக்கு முன்பாக பொய்யனாக காணப்படுகிறோம்.  நம்மிடத்தில் மீறுதல்கள் உண்டாயிருந்தும் மீறுதல்கள் இல்லை என்று கருதிக்கொள்கிறதினால் நம்முடைய காயம் ஆறாததாயிருக்கிறது.நம்முடைய மீறுதல்கள் நிமித்தமே கர்த்தர் நம்மை காயப்படுத்துகிறார்.  இப்படியாக நம்முடைய தப்பிதங்களை நாம் உணராமல் இருந்துக்கொண்டு தேவன் மேல் பிரியம் வைக்கிறது மனுஷருக்கு பிரயோஜனம் அல்ல என்கிறோம்.  ஆதலால் நாம் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்து அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வ வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது என்பதனை உணர்ந்துக் கொண்டு நம்முடைய செய்கைக்கு தக்கதை நமக்கு சரிகட்டிக்கொண்டு நம்முடைய நடத்தைக்கு தக்கதாக பலனளிக்கிறார்.ஆதலால் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கர்த்தர் நம்முடைய  நீதிக்குதக்கதாக சரிகட்டுகிறவர். ஆதலால் கர்த்தரின் நீதியை நாம் நமக்குள் நிறைவேற்றி அதற்குரிய நல்ல பலனை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.