தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 14:35
ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கரத்தால் அழிந்து போகாதபடி நம்மை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்ள வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் நம்முடைய செய்கைக்கு தக்க பலனைக் கொடுப்பார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 34:12-21
தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
மேற்கூறிய வசனங்களில் எலிகூ சொல்வது தேவன் அநியாயம் செய்யாமலும், சர்வ வல்லவர் நியாயத்தை புரட்டாமலும் இருப்பார். பூமியில் மேல் மனுஷனுக்கு கர்த்தர் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதும்; அவரே எல்லா அதிகாரமுடையவராயிருக்கிறார். அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாக திருப்பினாராகில் , அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடமாக இழுத்துக்கொள்வார். அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்து போகும், மனுஷன் மண்ணுக்கு திரும்புவான், என்று கூறிவிட்டு உமக்கு உணர்விருந்தால் இதனை கேளும், என் வார்த்தைகளின் சத்தத்திற்கு செவிகொடும். மேலும் நீதியை பகைக்கிறவன் ஆளமுடியாது மகா நீதிபரரை குறறப்படுத்த முடியாது. ஒரு ராஜாவை பார்த்து, நீர் பொல்லாதவன் என்றும், அதிபதிகளை பார்த்து, நீங்கள் அக்கிரமகாரர் என்று சொல்லதகாது. இப்படியிருக்க பிரபுக்களின் முகத்தைப் பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவான்களை அதிகமாய் எண்ணாமல் இருக்கிறவர் தேவன் என்றும்; மனுஷர்கள் எல்லாரும் கர்த்தரின் கையின் கிரியையே. கர்த்தருடைய கண்கள் மனுஷனுடைய வழியை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய வழிகளையெல்லாம் அவர் பார்க்கிறார். ஆதலால் எந்த மனுஷனும் கர்த்தருக்கு சித்தமில்லாத வழியில் நடந்தால் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதி ஜாமத்தில் கலங்கி ஒழிந்து போவார்கள்; காணாத கையினால் (கர்த்தரின்) பலவந்தர் அழிந்து போவார்கள்.
பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் நமக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் கர்த்தருக்கு முன்பாக எந்த மனுஷனும் நீதி நியாமில்லாமல் அவருக்கு முன்பாக தன்னை நியாயப்படுத்தி நிற்க முடியாது. மனுஷனுடைய எல்லா நடைகளையும் அவர் ஒன்று விடாமல் பார்த்து நியாயந்தீர்க்கிறார். ஆதலால் எந்த மனுஷனும் பொல்லாப்போடே வாழ்ந்து கர்த்தரிடத்தில் தப்புவித்துக் கொள்ள முடியாது. நாம் காணாதபடியே அவருடைய கையினால் நம்மில் பலவந்தவர் அழிந்து போவதற்கு ஏதுவாகும். ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒவ்வொரு நடைகளிலும் அவர் சித்தம் செய்வதில் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும். இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.