தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மீகா 4:6,7
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய நாட்களை வீணாக கழிக்காமல் இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கரத்தால் அழிந்து போகாதபடி நம்மை ஜாக்கிரதையாய் காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 34:22-37
அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர்,
எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச் சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.
தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ மேலும் யோபிடம் சொல்வதை நாம் கவனித்தால் யோபின் பொல்லாத செயல்களை நாம் ஆராய்ந்து அறிந்துக் கொள்ள முடியும். எப்படியென்றால் நாம் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாக அந்த வார்த்தைகளை தியானிப்போமானால் தான் நாம் புரிந்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரையில் நாம் வாசித்த வேதப்பகுதியில் எத்தனையோ வார்த்தைகள் சிநேகிதர்கள் சொல்லியும் யோபு தன்னை தாழ்த்தி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்கவில்லை. நான் தண்டிக்கப்பட்டேனு; நான் இனி பாவஞ் செய்யமாட்டேன்; நான் காணாத காரியத்தை எனக்கு போதியும் என்றோ, நான் அநியாயம் பண்ணினேனானால் இனி அப்படி செய்யமாட்டேன் என்று பிதாவினிடத்தில் சொல்லவுமில்லை.
பிரியமானவர்களே, நம்மிலும் அநேகர் இப்படி தான் கஷ்டங்கள் வந்தாலும் ஒரு போதும் நம்முடைய இருதயம் தங்கள் செய்கிற குற்றங்களை உணராமல் தன்னை தான் பாராட்டியும், கர்த்தரை குற்றப்படுத்தியும், அடிக்கடி கர்த்தரை குறித்து மேன்மை பாராட்டியும்; இவ்விதம் இருமனதோடு கா்த்தரிடத்தில் இருக்கிறதால் அவர்கள் வாழ்வு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியாமல் இருக்கிறது. ஆதலால் பிரியமானவர்களே, இதனை வாசிக்கும் போது நாம் நாட்களை வீணாக கழித்து விடாமல் கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளும்படியாக சீக்கிரமாய் நம்மை தாழ்த்தி குற்றங்களை அறிக்கைப்பண்ணி கர்த்தரின் பாதையில் நடக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.