தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 73:28

எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் வீணான வார்த்தைகளால் பாவஞ்செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய நாட்களை வீணாக கழிக்காமல் இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 35:1- 10

பின்னும் எலிகூ மாறுத்தரமாக:

என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?

நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.

உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.

நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.

நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?

நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?

உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.

அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.

பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,

மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ யோபுக்கு மாறுத்தரமாக கூறுகிறது என்னவென்றால்  யோபு தன்னைக் குறித்து பேசினதை சொல்லியும் உமக்கும், உம்மோடே இருக்கும் உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்கிறேன்.  மேலும் எலிகூ சொல்வது நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மை பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாய மண்டலத்தை கண்ணோக்கி பாரும், நீர் பாவஞ் செய்தால் கர்த்தருக்கு என்ன நஷ்டம் என்றும், உம்முடைய மீறுதல் மிகுதியானால் அவருக்கு ஒன்றும் சேதமில்லை என்றும், நீர் நீதிமானாயிருந்தால் அவருக்கு என்ன கிடைக்கும் என்றும், அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தை பெறுவார்? என்ன கேள்வி எழுப்பிக் கொண்டு உம்முடைய பாவத்தினால் உம்மைப் போன்ற மனுஷருக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்,   அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.  மேலும் அவன் சொன்னது பூமியின் மிருகங்களைப் பார்க்கிலும் எங்களை புத்திமான்களும், ஆகாசத்து பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி, மற்றும் 

யோபு 35:11-15 

என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.

அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.

தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.

அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.

இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.

மேற்கூறபட்ட வார்த்தைகள் யோபு சொல்லிய வார்த்தைகள் என்று எலிகூ சொல்லி;  ஆதலால் யோபு வீணாய் தம்முடைய வாயை திறந்து, அறிவில்லாத வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறான் என்கிறான்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் நம் எல்லாருடைய உள்ளத்திலும் எல்லாவற்றைக் காட்டிலும் உயரந்தவராக விளங்க வேண்டும் என்பதும், மற்றும் நம்முடைய ஆசீர்வாதங்களுக்காகவே நாம் நீதிமான்களாக வேண்டும் என்பதும், நாம் பாவஞ்செய்கிறதினால்  தேவனுக்கு  எந்த குறைவும் வராது என்பதும், நாம் வீணாக வார்த்தைகளை தேவனுக்கு மாறாக அலப்பக்கூடாது என்றும் பொருள் திருஷ்டாந்தப்படுத்தபடுகிறது.  ஆதலால் நாம் எந்த ஒரு நிலமையிலும் வீணான வார்த்தைகள் பேசாமல் நம்மை தாழ்மைப்படுத்தி கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.