தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 2:7

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவோடு உன்னதங்களில் சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் உட்காருகிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் வீணான வார்த்தைகளால் பாவஞ்செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 36:1-7 

பின்னும் எலிகூ:

நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.

நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.

மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.

அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.

அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.

மேற்கூறபட்ட வார்த்தைகளால் எலிகூ யோபுவிடம் பேசுவது என்னவென்றால் நான் பேசி முடியுமட்டும் சற்று தரித்திருக்க  வேண்டும்.  இன்னும் தேவனுடைய பட்சத்தில் நான் சொல்ல வேண்டிய நியாயங்களை சொல்லி காண்பிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவன் சொல்வது நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டு வந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்க பண்ணுவேன்.  என் வார்த்தைகளில் பொய் இல்லாமலும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவனாகவும் இருக்கிறான்.  அல்லாமலும் அவன் தேவனை குறித்து பேசுவது என்னவென்றால் அவர் மகத்துவமுள்ளவர், யாரையும் புறக்கணிக்க மாட்டார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர், துன்மார்க்கரை பிழைக்கவொட்டாதிருக்கிறார், சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவர்,  அவர் தம்முடைய கண்களை நீதிமான்களை விட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடேகூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் நாம் கிறிஸ்துவாகிய ஞானத்தை பெற்றுக்கொண்டு, அவர் நீதியை எப்போதும் நம்மில் விளங்க பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்.  அவர் மகத்துவமுள்ள ராஜா என்பதனையும், அவர் மன உருக்கத்தில் மகத்துவமுள்ளவராக இருக்கிறதால்; நாம் அவ்விதம் சுபாவம் உள்ளவர்களாக காணப்பட வேண்டும்.  அல்லாமலும் நம்முடைய வாழ்வில் பொய்யே இருக்கக்கூடாது என்றும், நம்முடைய வாழ்வில் துன்மார்க்கமாகிய உலக கிரியைகள் இருக்கக்கூடாது என்றும், தேவனுடைய நீதியை அனுதினம் நம்மேல் விளங்கப்பண்ணி நீதிமான்களாக விளங்குவோமானால் அவருடைய கண்களை நம்மை விட்டு விலக்கவே  மாட்டார். ஆனால் துன்மார்க்கமாகிய உலக இச்சைகளில் துன்மார்க்கரை பிழைக்கவிடவுமாட்டார், சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரித்து; தம்முடைய கண்களை நீதிமான்களை விட்டு விலக்காமல் அவர்கள் உள்ளத்திலே ராஜாக்களின் அபிஷேகத்தை வைத்து கிறிஸ்துவோடே கூட சிங்காசனத்தில் உட்காரவும் செய்கிறார்.  ஆதலால் நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவன் பெற்று அவரோடு சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் உட்காரவுங் செய்கிறார்.  ஆதலால் கிறிஸ்துவுக்குள்,பிரியமானவர்களே, நாம் தேவனால் அபிஷேகம் பெற்று அவருடைய சிங்காசனத்தில் அவரோடே  உட்கார அருள் செய்யும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.