தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 11:5
உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய மீறுதல் அக்கிரமங்களுக்காக தேவனுடைய கடிந்துக்கொள்வதனை ஏற்றுக்கொண்டு நம்மை சீர்திருத்தி ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவோடு உன்னதங்களில் சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் உட்காருகிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 36:8-12
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ நீதிமான்களை குறித்து சொல்வது என்னவென்றால்; அவர்கள் விலங்குகள் போடபட்டு உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டபட்டிருந்தாலும் தேவன் அவர்கள் கிரியையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்கு தெரியப்படுத்தி, அக்கிரமத்தை அவர்களை விட்டு திரும்பும்படி அவர்கள் செவியை திறந்து கடிந்துக்கொள்ளுகிறார். அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால் தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களை செல்வ வாழ்வாகவும் போக்குவார்கள். அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி ஞானம் அடையாமல் மாண்டு போவார்கள்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கென்று எழுதபட்டுள்ளது. என்னவென்றால் ஒருவன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளாமல் இருப்போனானால் அவன் ஆத்துமா இந்த உலகத்தோடு வாழ்ந்து, கிறிஸ்துவின் ஜீவன் இல்லாமல் இந்த மண்ணோடு மாண்டு போகிறது. ஆனால் நாம் நம்முடைய மீறுதல் அக்கிரமம் இவற்றின் நிமித்தமாக தேவனால் விலங்குகள் போடபட்டும், உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டபட்டுமிருந்தாலும், தேவன் நம்முடைய கிரியையையும், நம்முடைய மீறுதல்களையும் தெரியப்படுத்தி அவற்றினின்று திரும்பும்படியாக நம்முடைய செவியை திறந்து கடிந்துக்கொள்ளும்போது;அவற்றிற்கு நாம் அடங்கி அவரை சேவித்தால், நம்முடைய நாட்களை நன்மையாகவும், நம்முடைய வருஷங்களில் செல்வ வாழ்வாகவும் வாழ்வோம். ஆதலால் கர்த்தர் நம்மை கடிந்துக்கொள்ளும் போது அதனை ஏற்றுக்கொண்டு ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.