தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மத்தேயு 26:26,27

அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.

பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் போஜனபந்தியை ஆயத்தம் பண்ண வேண்டும்.

 கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதிகளில் மணவாட்டி சபையாகிய நம்முடைய மீறுதல்கள் அக்கிரமங்களுக்காக தேவனுடைய கடிந்துக்கொள்ளுதலை நாம் ஏற்றுக்கொண்டு நம்மை சீர்திருத்தி அவருடைய ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 36:13-16 

மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.

அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.

சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.

அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.

மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ மீண்டும் யோபுவிடம் கூறியது மாயமுள்ள இருதயத்தார்  குரோதத்தை குவித்து வைக்கிறார்கள்; அவர்களை தேவன் கட்டி வைக்கும் போது அவரை நோக்கி கெஞ்சி கூப்பிடுவார்கள். அப்படிபட்டவர்கள் வாலவயதிலே மாண்டு போவார்கள்.  இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும். அல்லாமலும் சிறுமைபட்டவர்களை அவர்கள் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கபட்டிருக்கும்  போது அவர்களை செவியை திறக்கிறார்.  மேலும் அவன் யோபிடம் சொல்வது அப்படியே உம்மையும் நெருக்கத்தினின்று விடுதலையாக்கி விசாலத்திலே வைப்பார்.  உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.  

பிரியமானவர்களே, நாமும் இதனை போல் தேவனால் ஒடுக்கபட்டிருப்போமானால் அவர் நம்மை சிறுமைபடுத்தி நெருக்கத்திற்கு ஒப்புக்கொடுக்கிறார்.  இதன் காரணம் என்னவென்றால் நம்முடைய இருதயத்தில் குரோதத்தை குவித்து வைத்திருக்கிறதால் என்பதனை உணர்ந்து நாம் கர்த்தரை நோக்கி கெஞ்சி கூப்பிடும் போது அவர்  நம்முடைய செவியை, அவருடைய சத்தம் கேட்கும்படி திறந்து சிறுமையிலிருந்து நீங்கலாக்கி விசாலத்திலே வைக்கிறார்.  பின்பு அவர் நமக்கு ஆயத்தம் பண்ணின போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைய பண்ணுகிறார்.  இவ்விதமாக நமக்கு கர்த்தர் போஜனபந்தியை ஆயத்தம் பண்ணும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.