தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1சாமுவேல் 2:10 

கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம்  கர்த்தர் நம்மில் நடப்பிக்கிற அவர் கிரியையினால் அவரை எப்போதும் மகிமைப்படுத்த வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தர் போஜனபந்தியை ஆயத்தம் பண்ண வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

யோபு 36:17- 23

ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.

உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும்பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.

உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.

ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.

அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.

இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?

அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?

மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ யோபுவிடம் கூறுவது என்னவென்றால் ஆகாதவன் மேல் வரும் நியாயதீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.  நீர் கர்த்தருக்கு உக்கிரகமுண்டாக்குகிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடி எச்சரிக்கையாயிரும் என்றும்; அப்பொழுது மீட்கும் பொருளை மிகுதியாகக் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.  மேலும் எலிகூ சொன்னது உம்முடைய செல்வத்தையும், உம்முடைய பொன்னையும், உம்முடைய பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டார் என்றான். பின்னும் அவன் சொன்னது ஜனங்கள் போகிறது போல உம்மை வாரிக்கொள்ளுகிற இரவை வாஞ்சிக்காதிரும்.  உபத்திரவத்தை பார்க்கிலும் அக்கிரமத்தை தெரிந்துக்கொள்ளாதபடி, அக்கிரமத்துக்கு திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.  தேவன் தமது வல்லமையினால் உயரந்திருக்கிறார்; அவரை போல் போதிக்கிறவன் யாரும் இல்லை.  அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கதக்கவன் ஒருவனுமில்லை.  நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லதக்கவன் யாருமில்லை.  ஆதலால் மனுஷனை நோக்கி பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமை படுத்த நினையும்.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வார்த்தைகள் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.   என்னவென்றால் கர்த்தர் நம்மை சிட்சிக்கும் போது நாம் கீழ்படிந்து, நம் வாழ்வில் செய்த அக்கிரமங்கள் மீறுதல்கள் என்னெவென்று நம்மை நாமே சோதித்தறிந்து மீண்டும் அக்கிரமம் செய்ய திரும்பாமல் நம்மை வசனத்தால் காத்துக்கொள்ள வேண்டும்.  அப்படி செய்யாமல் நாம் கர்த்தருக்கு உக்கிரகோபம் உண்டாக்குவோமானால் அவர் நம்மை ஒரு அடியினால்  அடித்து மற்ற ஜனங்களை வாரிக்கொண்டு போவது போல் செய்வார்.  ஆதலால் நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நம்முடைய மீட்கும் பொருளாக அவர் ஜீவனை நமக்கு தந்திருக்கிறதால், அவர் இரத்தம் நம்மை மீட்கும்படியாக நாம் அவர் சத்தியத்திற்கு கீழ்படிந்து நம்முடைய உலக மேன்மையை முற்றிலும் மாற்றி பொன்னையும், நம்முடைய பராக்கிரமத்தையும் நாம் மதிக்காமல் அவரே நம்முடைய இரட்சகர் என்று நாவால் அறிக்கை செய்து, அவர் தருகிற உபத்திரவத்தை தெரிந்துக்கொண்டு; அவர் தம்முடைய வல்லமையால் நம்மில் உயர்த்திருக்கும் படியும்,  அவர் தான் எல்லாவற்றையும் போதிக்கிறார் என்பதனை உணர்ந்து, மனுஷனை நோக்கி பார்க்கிற அவருடைய கிரியையை நாம் எப்போதும் மகிமைபடுத்த வேண்டும்.  ஆதலால் நாம் எப்போதும் கர்த்தரை மகிமைபடுத்தும்படியாக எல்லாவற்றிலும் நம்மை தாழ்மைப்படுத்தி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.