தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 62:2,3

ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவால் கர்த்தரின் கையில் அலங்காரமான கிரீடமும்,  ராஜமுடியுமாயிருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம்  கர்த்தர் நம்மில் நடப்பிக்கிற அவர் கிரியையினால் அவரை எப்போதும் மகிமைப்படுத்த வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 36:24-33

மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.

எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.

இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.

அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.

அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.

மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?

இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.

அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.

அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.

அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.

மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ யோபுவிடம் சொல்வது கர்த்தர் மனுஷனை பார்க்கிற அவருடைய கிரியை எல்லா மனுஷர்களும் பார்க்கிறார்களே, அது அவர்களுக்கு தூரத்திலிருந்து வெளிப்படுகிறது.  தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவரின் வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.  அவர் நீர்துளிகளை அணுவைப் போல் ஏறப்பண்ணுகிறார்; ஆகையால் மேகத்திலிருந்து மழைச்சொரிகிறது.  அதனை மேகங்கள் பெய்து மனுஷர்கள்மேல் மிகுதியாய் பொழிகிறது.  மேகங்களில் பரவுதல்களும்,அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமறல்களையும் அறியமுடியாது. அதின் மேல் அவர் தம்முடைய  மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களை மூடுகிறார்.  அவர் ஜனங்களின் தப்பிதங்களுக்காக தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.  அவர் மின்னலின் ஒளியை தமது கைக்குள்ளாக மூடி, அது இன்னதை அடிக்க வேண்டுமென்று கட்டளையிடும் போது, அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்ப போகிறதையும் ஆடுமாடுகள் அறியபடுத்தும்.  

பிரியமானவர்களே மேற்கூறபட்டவைகள் எல்லாமே நம்மிடத்தில் கர்த்தர் செய்யும் கிரியையும், அதனை நாம் அறிந்துக் கொள்ளும் விதமும் திருஷ்டாந்தப்படுத்தபட்டிருக்கிறது. என்னவென்றால் தேவன் மிகவும் மகத்துவமுள்ள தேவன்.  அவரை குறித்து எந்த மனுஷனாலும் ஆராய முடியாது என்பதனை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் அவருடைய வருஷங்கள் அளந்து ஆராய முடியாது.  அவர் நம்மை இரட்சிக்கிற விதம் எப்படியென்றல் நீர் துளியாகிய வேத வசனத்தை அணுவை போல் நம்மேல் ஏறபண்ணும் போது, நம்முடைய உள்ளம் மேகங்களாகிறது.  அந்த மேகத்திலிருந்து மழை பொழிந்து அநேக மனுஷர்கள் மேல் மிகுதியாய் பொழிகிறது.  அவ்விதமாக அதனை பரவ செய்து, அவர் குமறல்களின் சத்தம் நம்முடைய உள்ளத்தில் எழும்பும் போது,  நம்மை ஆளுகை செய்துக்கொண்டிருந்த சாத்தானை துரத்தியடிக்கிறார்.  பின்பு அவர் தம்முடைய குமாரனாகிய மின்னலின் ஒளியை நமக்குள் விரிக்கிறார்.  மேலும் சமுத்திரமாகிய துன்மார்க்கமாகிய உலக மோக இச்சைகள் செயல்படாதபடி அதனை மூடி, நாம் செய்த தப்பிதங்களுக்காக நம்மை தண்டித்து, நம்முடைய ஆத்துமாவின் விடுதலைக்காக பரலோக ஆகாரமாகிய வேத வசனம் புசிக்க தருகிறார். அவ்விதம் கர்த்தர் நம்மை இரட்சித்து அவர் கைக்குள்ளாக நம்மை பாதுகாக்கிறார்.  அப்படியாக நாம் இரட்சிக்கபடும்போது நமக்கு எப்போது எது நடக்கும் என்பதனை நமக்கு தெரியப்படுத்துகிறார்.  அப்படியாக நம் உள்ளத்தில் வருகிற ஒளி தான் கிறிஸ்து; அவர்தான் நம்முடைய இரட்சிப்பு.  அதனை குறித்து  தான் வேத வசனம் சொல்கிறது நீ கர்த்தரின் கையில்  அலங்காரமான கிரீடமும் ராஜமுடியுமாயிருப்பாய் என்கிறார்.  இப்படியான ஆசீர்வாதத்தை நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.