தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 1:13
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தேவனால் பரிசுத்த ஆவியின் முத்திரை தரித்தவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவால் கர்த்தரின் கையில் அலங்காரமான கிரீடமும், ராஜமுடியுமாயிருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 37:1-5
இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ யோபுவிடம் சொல்வது அவன் வார்த்தைகளை கேட்டு என் இருதயம் தத்தளித்து, தன் இடத்தை விட்டு தெறிக்கிறது. மேலும் அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயினால் புறபட்ட முழக்கத்தையும் கவனமாய் கேட்கும் போது, அவர் வானத்தின் கீழெங்கும் அந்த தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதன் மின்னலையும் வரவிடுகிறார். அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தை குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கபடும்போது அதை தவிர்க்க முடியாது. தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியவிதமாக குமறப்பண்ணுகிறார். நாம் கிரகிக்கக்கூடாத பெரியக் காரியங்களை அவர் செய்கிறார் என்கிறான். மேலும் அவர் செய்கிற காரியம்
யோபு 37:6
அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
மேற்கூறபட்ட வார்த்தைகள் பிரகாரம் செய்யும் போது தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப் போடுகிறார்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் பிரகாரம் கர்த்தர் கிறிஸ்துவினால் சத்தத்தை நமக்குள் குமறபண்ணுகிறதன் காரணம் என்றவென்றால் அவருடைய மகத்துவத்தை நமக்கு வெளிப்படுத்தி உள்ளத்தின் எல்லா செய்கையிலும், செயலிலும் மாற்றங்கள் உண்டுபண்ணுகிறார். அல்லாமலும் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களாகிய உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் (வாதைகள் ) நம் உள்ளத்தில் அனுப்பும் போது, அவருடைய ஜனங்கள் அவரை அறிந்துக் கொள்கிறதற்கு ஏதுவாகும். இப்படியாக அவர் உண்டாக்கின மனுஷரும் அவரை அறிந்துக்கொள்ளும்படிக்கு சகல மனுஷருடைய கரமானது தேவனால் முத்திரைப் போடப்படுகிறது. இப்படியாக நாம் தேவனால் முத்திரை போடப்படுகிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.