தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 23:6 

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவன் தருகிற தண்டனையை ஏற்றுக்கொண்டு, தேவனுக்கு செவிக்கொடுத்தால் கர்த்தரின் கிருபையும், நன்மையும் உண்டாகும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதிகளில்

மணவாட்டி சபையாகிய நாம் தேவனால் பரிசுத்த ஆவியின் முத்திரை தரித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோபு 37:8-14

அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.

தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.

தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.

அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.

அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.

ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.

யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.

மேற்கூறபட்ட வசனங்களில் எலிகூ யோபுவிடம் கர்த்தரின் வல்லமையும் மகத்துவமும் மனுஷருக்குள் விளங்குகிற விதத்தை கூறி, மனுஷன் தேவனை அறிந்துக்கொள்ளும்படியாக முத்திரை போடபட்ட பின்பு அவனில் இருக்கிற பொல்லாத எண்ணங்கள்) (காட்டு மிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்குகிறது)  என்றால், அந்த பொல்லாத காட்டு மிருகங்களில் சுபாவங்கள் நம்மை விட்டு மாற்றப்படும்.  மேலும் தேவன் தம்முடைய வல்லமையான மகத்துவத்தினால் 

யோபு 37:9-11 

அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.

தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.

தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.

அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.

மேற்கூறபட்ட வசனங்களில் தேவன் தம்முடைய மகத்துவமும்; அவர் அவைகளுக்கு கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சகரத்தில் (உள்ளத்தில்) நடப்பிக்கும்படி, அவர் அவைகளை தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றி திரியப்பண்ணுகிறார்.  ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரபண்ணுகிறார். பின்னும் அவன் யோபே, இதற்கு செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளை தியானித்துப்பாரும் என்கிறான். 

பிரியமானவர்களே,  மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் நமக்குள் வாதைகளாக போராட்டங்களை அனுப்புவது எதற்கென்றால் ஒன்றில் தண்டனையாகவும், அது ஒன்றில் நமக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும் அவைகளை வரபண்ணுகிறார்.  இதனை திருஷ்டாந்தபடுத்தியே எகிப்தை விட்டு இஸ்ரவேலை கர்த்தரை ஆராதிக்கும்படி பிரித்தெடுக்கவே மோசே ஆரோன் என்பவர்களை எகிப்திற்கு கர்த்தர் அனுப்பி அங்கு வாதைகளை வரவிடுகிறதை பார்க்கிறோம். அதனை சம்பந்தபடுத்தி தான் இந்த கர்த்தரின் வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆதலால் நம் வாழ்வில் உள்ளத்தில் போராட்டங்கள் வரும் போது, கர்த்தரின் வார்த்தைகளுக்கு செவிக்கொடுத்து அவரில்(கிறிஸ்துவில்) தரித்திரிக்கும் போது நம் உள்ளத்தில் ஆச்சரியமான கிரியைகளை நடப்பித்து; நமக்கு கர்த்தரால் வந்த தண்டனை நமக்கு கிருபையாகவும், உபயோகமாகவும் மாறுகிறது.  இப்படியாக நாம் எப்போதும் கிறிஸ்து இயேசுவில் தரித்திருந்து கிருபையும் நன்மையும் பெற்றுக் கொள்ளும்படியாக ஒப்புக் கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.