தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கொலோசெயர் 1:12,13
ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைகிறவர்களாக இருக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய இருதயத்தில் அகந்தையில்லாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
யோபு 42:1-3
அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தர் யோபுவிடம் கேட்ட கேள்விகளுக்கு, யோபு கர்த்தரிடத்தில் எவ்விதம் தாழ்மைப்படுகிறான் என்றால்; தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைப்படாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? என்று தன்னை கர்த்தரிலும் தாழ்மைப்படுத்துகிறான். மேலும் அவன் சொல்கிறான் நான் எனக்கு தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறான். பின்பு யோபு கர்த்தரிடத்தில் சொல்வது
யோபு 42:4-6
நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
பின்பு கர்த்தர் தோமானியனான எலிப்பாசை நோக்கி சொல்வது என்னவென்றால்
யோபு 42:7-9
கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.
ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத்தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார்.
அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார்.
மேற்கூறபட்ட வார்த்தைகளை கேட்ட யோபின் மூன்று சிநேகிதர்களும் கர்த்தர் தங்களுக்கு சொன்னபடியே செய்தார்கள். அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தை பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்த போது யோபின் சிறையிருப்பை மாற்றினார்; அப்போது யோபுவுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டந்தனையாய் கர்த்தர் அவனுக்கு தந்தருளினார். அப்போது அவனுடைய எல்லா சகோதரரும், முன் அவனுக்கு அறிமுகமாயிருந்த அனைவரும் அவனுடைய வீட்டில் வந்து அவனோட போஜனம் பண்ணி; கர்த்தர் அவன் மேல் வைத்திருந்த சகல தீங்கிற்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்க காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்கு கொடுத்தார்கள். கர்த்தர் யோபின் முன்னிலமையை காட்டிலும் பின்னிலமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அவர்களின் பெயர்
யோபு 42:10-15
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல்சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள்.
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.
ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப் போல் சொளந்தரியமுள்ள பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே சுதந்தரம் கொடுத்தான். பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாக பிள்ளைகளையும், தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். யோபு நெடுநாளாயிருந்து பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் யோபு கர்த்தரின் கையில் இருந்து துன்பம் அனுபவிக்கும் போது, யாருடைய சொல்லுக்கும் கீழ்படியாமல் கர்த்தரையே சோதித்துக்கொண்டிருந்தான். இதனை கேட்ட கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுவுக்கு உத்தரமாக அநேக கேள்விகள் எழுப்புகிறார். இதனை கேட்ட யோபு மறுபடு சொல்லக்கூடாமல் கர்த்தரின் பாதத்தில் தன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறான். அதற்கு பின்பு கர்த்தர் யோபின் மூன்று சிநேகிதர்களிடமும் அவர்கள் அக்கிரமத்தை எடுத்துச்சொல்லும் போது; அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அவர் சொற்பிரகாரம் செய்கிறார்கள். அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தை பார்க்கிறார். பின்பு யோபு தன் சிநேகிதருக்காக கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டதால் அவர்கள் சிறையிருப்பு திருப்பப்படுகிறது. இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காரணம் நம்முடைய சகோதரருக்காக எப்போதும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்யும் போது, கர்த்தர் நம் ஆத்துமாவின் சிறையிருப்பை மாற்றி இரண்டந்தனையான கிருபையினால் நம்மை ஆசீர்வதிப்பார். இதனை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்தினது என்னவென்றால் நீதிமான் விழுந்தாலும் எழுந்திருப்பான் என்பதனை உணர்த்தி விழுந்து போன தாவீதின் கூடாரமாகிய கர்த்தரின் சபையை கர்த்தர் திரும்ப எடுத்து இரண்டந்தனை ஆசீர்வாதத்தோடு நிலைநிறுத்துகிறார்; அதன் காரணம் தங்கள் அக்கிரமங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக அறிக்கை பண்ணினபின்பு கர்த்தர் ஆசீர்வதிக்கிறார். அந்த ஆசீர்வாதம் சபையாம் தலைமுறை தலைமுறை பிள்ளைகளை பெற்றெடுக்கும். அவருடைய ஆசீர்வாதம் சொளந்தரியமுள்ளதாய் நெடுநாளாய் நிலைப்பெற்றிருக்கும்; கர்த்தரின் சபையில் சுதந்தரம் பெற்றுக்கொள்ளலாம். இப்படியாக நாமும் சகோதரரின் சுதந்தரத்தில் பங்கடையும்படியாக ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.