தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபேசியர் 4:22-24
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,
உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,
மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாம் ஜனங்களை இந்த உலகத்திற்கு உகந்தபடி இச்சைகளுக்கேற்றபடி நடத்தக்கூடாது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான கருத்துக்களைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 1:1-6
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.
மேற்கூறபட்ட வசனங்கள் எல்லாம் கிறிஸ்துவின் சபையாம் ஜனங்கள் எவ்வணம் இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. எப்படியெனில் துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாமல் என்பது உலக ஆசை இச்சைகளுக்கேற்ற பிரகாரம் தேவனுடைய சபையில் ஜனங்களை நடத்தக்கூடாது என்றும், சபையாம் ஜனங்கள் பாவிகள் நடக்கிற வழியில் நிற்கக்கூடாது என்றும் துன்மார்க்கமாகிய உலக இச்சைகளின் படி நடக்கிற ஜனங்களிடையில் (பரியாசக்காரரின்) உட்காரக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது. கர்த்தருடைய வேதத்தை இரவும் பகலும் தியானிக்கிறவர்கள் நீர்கால்களின் ஓரமாய் நடப்படுகிற மரமானது, இலையுதிராதபடி தன்தன் காலத்தில் தன்தன் கனியைக்கொடுக்கிறது போல கனிக் கொடுக்கிறவர்களாயிருப்பார்கள். அப்படிபட்ட மனுஷன் பாக்கியவானாயிருப்பான். அவன் செய்கிற காரியங்கள் வாய்க்கும். ஆனால் துன்மார்க்கரோ மேற்கூறபட்டபடியில்லாமல் நடக்கிறவர்கள் காற்று பறக்கடித்து தள்ளுகிற பதரை போல் இருப்பார்கள். ஆகையால் துன்மார்க்கர் நியாயந்தீர்க்கும் போதும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்க முடியாது. கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் (உலக இச்சைகளின் படி நடக்கிறவர்களின்) வழியோ அழியும்.ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.