தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 118:27
கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு வேலைசெய்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாம் ஜனங்களை இந்த உலகத்திற்கு உகந்தபடி இச்சைகளுக்கேற்றபடி நடத்தக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 2:1-3
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் பயத்தோடே கர்த்தரை சேவிக்க வேண்டும், நடுக்கத்துடனே களிகூர வேண்டும் என்பதனை நாம் மிகவும் கருத்தாய் கைக்கொள்ள வேண்டும். அல்லாமலும் சேவித்தல் என்றால் கர்த்தருக்கு வேலை செய்தல் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த சங்கீதம் கர்த்தராகிய இயேசுவை, நம்முடைய தேவன் ராஜாவாக உள்ளத்தில் அபிஷேகம் பண்ணி வைக்கிறார். நம் உள்ளமானது அபிஷேகத்தால் நிறையப்படுவது கிறிஸ்துவின் மகிமை. கர்த்தராகிய இயேசு கூறுகிறார் தீர்மானத்தின் விவரம் சொல்லுகிறேன் என்று
சங்கீதம் 2:7-9
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
வசனங்களில் அவர் வார்த்தைகள் என்னவென்றால் கர்த்தராகிய தேவன் அவரிடம் சொன்னவைகள். ஆதலால் நம்மை பார்த்து அவர் அபிஷேகத்தால் நிறையப்பட்டவர்களிடம் இப்போதும் ராஜாக்களே உணர்வடையுங்கள் என்கிறார். அதுமட்டுமல்ல நாம் குமாரனை முத்தம் செய்தால் மட்டுமே (சபையாம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் விசுவாச யாத்திரையின் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துதல் கொடுக்க வேண்டும்.) அப்படியாகிறவர்கள் விசுவாச பாதையில் வழியில் அழிய மாட்டர்கள் என்கிறார். மேலும் அவர் நம்மிடம் சொல்வது நமக்கு விரோதமான ஜாதிகள் கொந்தளிக்கும், ஜனங்கள் விருதா காரியத்தை சிந்திப்பார்கள். என்னவென்றால் நமக்கும் தேவனுக்கும் கிறிஸ்துமூலம் உள்ள இணைப்பை நம்மை விட்டு அறுத்து விடுவோம் என்றும், அன்பின் (கற்பனையின்) கயிறுகளை நம்மை விட்டு எறிந்து விடுவோம் என்கிறார்கள். ஆனால் இதனை காண்கிற கர்த்தர்
சங்கீதம் 2:4,5
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
மேற்கூறபட்டவைகளை கர்த்தர் நமக்காக செய்து நம்மை கிறிஸ்துவில் நிலைநிறுத்துகிறார். ஆதலால் பிரியமானவர்களே, கர்த்தர் கூறியவற்றை கருத்தோடு கைக்கொண்டு நடப்போம் என்று ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.