தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 68:15

தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மை சத்துருக்களின் கையினின்று விடுதலையாக்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில்

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு வேலை செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

சங்கீதம் 3:1-3

(தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.) கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)

ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.

மேற்கூறப்பட்டவைகளின் கருத்துக்கள்  என்னவென்றால் தாவீது தன் குமாரனாகிய அப்சலோமுக்கு தப்பி ஓடிப்போகையில் கர்த்தரிடத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்களாவன; அவன் வாழ்வில் எப்போதும் சத்துருக்கள் பெருகிக் கொண்டிருந்தார்கள்.  அதுமட்டுமல்லாமல் தன் சொந்த குமாரனே தகப்பனுக்கு  விரோதமாக தன் கூட்டத்தாரோடு எழுப்புகிறான்.  இதனால் வேதனையோடு  தாவீது சொல்கிறான்; அநேகர் என் ஆத்துமாவை பார்த்து இவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று சொல்கிறதால்; கர்த்தாவே நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.  

      இவ்விதமாக அவன் கர்த்தரிடத்தில் தன்னை தாழ்த்தி இருதயம் நொறுங்கி ஒப்பக்கொடுத்ததால்  கர்த்தர் அவனை அவன் சத்துருக்களின் கையில் ஒப்புக்கொடாதபடி பாதுகாக்கிறார்.  அப்போது அவன் தன்னுடைய வாழ்வில் பெற்றுக்கொண்ட இரட்சிப்பை குறித்து கூறியதாவது  

சங்கீதம் 3:4-8  

நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)

நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.

எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.

கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.

இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)

மேற்கூறப்பட்ட வார்த்தைகள் எல்லாம் தாவீது தன் வாழ்வில் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்ட விடுதலையையும், அவன் மூலம் கர்த்தர் நமக்கு கற்பித்து தருகிற விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டிய விண்ணப்பமும் ஆகும். ஆதலால் 

பிரியமானவர்களே, நம்முடைய வாழ்வில் எத்தனை சத்துருக்கள் பெருகியிருந்தால், நம் வீட்டாரே நமக்கு சத்துருக்களாயிருந்தாலும் கர்த்தரை மகிமை படுத்தி, நம்மை தாழ்த்தி விண்ணப்பிப்போமானால்  கர்த்தர் நம்மை சத்துருக்களின் கையிலிருந்து விடுதலையாக்கி இரட்சிப்பார்.  பூமியிலே ஏன் சத்துருக்கள் நமக்கு பெருகுகிறார்கள் என்றால் நம் உள்ளத்தில் தேவனுக்கு மாறாத செயல்கள் உள்ளதால் உள்ளத்தில் தேவனுக்கு விரோதமான சத்துருக்களுக்கு நாம் இடம் கொடுக்கிறதால் கர்த்தர் நம் வீட்டிற்குள்ளே சத்துருக்கள் வர செய்கிறார்.  ஆதலால் முதலில் உள்ளம் தேவனுக்கென்று அர்ப்பணிப்போமால், நம் வாழ்வில் வெளியே உள்ள சத்துருக்களினின்று நம்மை விடுதலையாக்கி இரட்சிப்பார்.  இப்படியாக நாம் சத்துருக்கள் கையினின்று விடுதலையாகும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.