தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 84:5
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் சுகமான நித்திரை பெற்றுக்கொள்ளலாம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்மை சத்துருக்களின் கையினின்று விடுதலையாக்குகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்; நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட தாவீதின்
சங்கீதம்:4:1-8
(நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
இந்த சங்கீதம் நாம் தியானிக்கும் போது, தேவன் நம்மில் கிறிஸ்துவை அபிஷேகம் பண்ணி வைத்திருக்கும் போது நாம் கிறிஸ்துவின் மகிமைக்கு மாறாக துர்கிரியைகளாகிய உலக எண்ணங்களால் உள்ளத்தை அசுத்திபடுத்தும் போது, நம்மில் இருக்கிற கிறிஸ்து நம்மிடத்தில் கேட்பது எப்படியென்றால்
சங்கீதம் 4:2-5
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
மேலே கொடுக்கப்பட்ட வார்த்தைகள் நம்மிடத்தில் கூறிவிட்டு தேவனிடத்தில் விண்ணப்பிப்பது என்னவென்றால்
சங்கீதம் 4:1
(நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
இந்த வார்த்தை நெருக்கத்தினின்று தேவன் நம்மை விடுவித்து விசாலதையில் கொண்டு நிறுத்தின பின்பு நம் உள்ளம் அவரிடத்தில் உண்மையில்லாமல் இருக்கிறதால்
சங்கீதம் 4:6-8
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் என்னவென்றால் நம் உள்ளம் இரட்சிப்பினால் சந்தோஷம் அடையும் போது நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன் என்கிறார். பின்பு அவர் தேவனாகிய கர்த்தரை நோக்கி சொல்கிறார், நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறீர். பிரியமானவர்களே, இதனைக்குறித்து தான் கர்த்தராகிய கிறிஸ்து படகில் யாத்திரை சீஷர்களோடு செய்யும் போது அதன் பின்பக்கம் படுத்து நித்திரை செய்துக்கொண்டிருந்தார் என்று
லூக்கா 8:23
படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்று உண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது.
லூக்கா 8:23 ல் திருஷ்டாந்தத்திற்கென்று நமக்கு நடந்து காட்டுகிறார். ஆதலால் பிரியமானவர்களே, நம்முடைய இரட்சிப்பு என்றாலே கர்த்தர் நம் உள்ளத்தில் வந்து சுகமாய் வாசம்பண்ணுவது. அவ்விதம் வாசம் பண்ணினாரானால் நமக்கு மிகுந்த சமாதானமும் சுகமான நித்திரையும் கிடைக்கும். இப்படியாக நம்முடைய வாழ்வு ஆசீர்வதிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.