தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 121:7
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் காருணியம் என்னும் கேடகம் நம்மை சூழ கர்த்தர் காக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் சுகமான நித்திரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 5:1-3
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
மேற்கூறபட்டவைகள் என்னவென்றால் நெகிலோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்: இவற்றில் நம்மில் அபிஷேகம் பண்ணபட்ட கிறிஸ்து தேவனாகிய கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்வதும், காலையிலே என்சத்தத்தை கேளும் என்றும்; அந்நேரமே தேவனுக்கு நேராக வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன் என்பதும் நமக்கு கிறிஸ்து காட்டுகிற மாதிரி. அதென்னவென்றால் நாம் அவ்விதமாக காணப்பட வேண்டு்ம் என்பதே அவர் சித்தம். மேலும் தேவன் வெறுக்கிற காரியங்கள்
சங்கீதம் 5:4-6
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
ஆனால் நாம் எப்படி இருக்க வேண்டுமென்றால்
சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
மேற்கூறபட்ட வசனங்கள் பிரகாரம் பயபக்தியோடு நாம் கர்த்தரை பணிந்துக்கொண்டால்; கர்த்தராகிய கிறிஸ்து சொல்கிறார்
சங்கீதம் 5:8-12
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படிசெய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
மேற்கூறபட்ட வார்த்தைகளாவன தேவன் நீதியில் நடத்தவும், நம்முடைய வழியை செம்மைப்படுத்தவும், நம்முடைய வாய் உண்மை பேசும்படியாகவும், நம்முடைய உள்ளம் கேடுபாடுகள் நிறையாதபடியும், நம் தொண்டை சுத்தமாகவும், நம்முடைய நாவினால் இச்சகம் பேசாதபடியும் நம்மை காத்துக்கொள்வதே தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார். இப்படியாக நம்மை காத்துக்கொள்ளும் போது, நம்முடைய ஆலோசனையில் நாம் விழாதபடியும், நம்மை அவர் தள்ளிவிடாமலும் இருப்பார். நாம் ஒரு போதும் கர்த்தருக்கு விரோதமாக கலகம்பண்ணாமல் காத்துக்கொள்ள வேண்டும். இப்படியாக நாம் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருப்போமானால் நாம் யாவருக்கும், சந்தோஷமும், எந்நாளும் கெம்பீரிப்பும் உண்டாகும். நாம் கர்த்தரை கெம்பீரமாய் ஆர்ப்பரிப்போமானால் அவர் நம்மை எல்லாவற்றிலும் காப்பாற்றுவார். அவர் நாமத்தை எப்போதும் நேசிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்; அப்போது நாம் அவரில் களிகூருகிறவர்களாக இருப்போம். இப்படியாக கர்த்தர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னும் கேடகத்தினால் அவனை சூழ்ந்துக்கொள்ளும்படி செய்கிறார். ஆதலால் பிரியமானவர்களே, மேற்கூறபட்ட கருத்துக்கள் எல்லாவற்றிலும் நாம் உண்மையோடு இருப்போமானால் கர்த்தர் கிறிஸ்து மூலம் எல்லாவிதத்திலும் நம்மை ஆசீர்வதிப்பார். இப்படி கர்த்தரின் ஆசீர்வாதத்திற்காக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.