தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 15:14

புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்படுகிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்குதியில், மணவாட்டி சபையாகிய நாம் நமக்கு நாமே குழிவெட்டாமல் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 8:1-8 

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.

பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.

நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,

ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.

மேற்கூறிய வசனங்கள் கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க இராகவத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாவது; இதனை குறித்து கூறப்படும் வார்த்தைகள் என்ன்வென்றால் கர்த்தருடைய நாமம் பூமியெங்கும் மகா மேன்மையுள்ளதும், அவர் தம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்திருக்கிறார் என்பதும்  பகைஞனையும், பழிக்காரனையும் அடக்கிப்போட, தேவன் தம்முடைய  சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டு பண்ணுகிறார். அவருடைய விரல்களின் கிரியைகளாகிய வானங்களும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் பார்க்கும் போது, மனுஷனை நினைக்கிறதற்கும்,  மனுஷ குமாரனை விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்  என்னப்படுகிறது.  மேலும் மனுஷ குமாரனாகிய கிறிஸ்துவை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கி, அவனை மகிமையினாலும், கனத்தினாலும் மூடிசூட்டினார் என்பதும், அவருடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவருக்கு ஆளுகைக் கொடுத்து , சகலத்தையும் அவருடைய பாதங்களுக்கு கீழ்படுத்தியிருக்கிறார்.    மேலும் 

சங்கீதம் 8:9 

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.

மேற்கூறபட்ட எல்லாம் அவருடைய பாதங்களுக்கு கீழ்படுத்தி, இவ்விதமாக அவருடைய நாமம் பூமியெங்கும் மகா மேன்மையுள்ளதாய் விளங்கிக்கொண்டிருக்கிறது. 

பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய கர்த்தர் மகாமேன்மையுள்ளவரும், மகத்துவம் நிறைந்தருமானவர்.  அல்லாமலும் நம்முடைய வாய், கிறிஸ்துவின் வாயாக இருந்து பகைஞனையும் பழிக்காரனையும் அடக்கிப்போடும்படியாக எல்லா அதிகாரமும் தேவன் தம்முடைய குமாரனாகிய மனுஷகுமாரனுக்கு கொடுத்து எல்லாவற்றையும் அவர் பாதங்களுக்கு கீழ்படுத்துகிறார். மேலும் அவர் நம் உள்ளத்திற்குள் இருந்து எல்லாவற்றையும் செய்யும்படியாக அவரை மகிமையினாலும், கனத்தினாலும் அவரை முடிசூட்டுகிறார். எப்படியனில் நாம் ஒவ்வொரு தேவ சத்தத்திற்கும் கீழ்படிகிறவர்களாக இருக்க வேண்டும். அப்படியாக நாம்  அவர் சித்தம் செய்தால் கிறிஸ்து நம்மில் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்படுகிறார்.  இவ்விதம் கிறிஸ்து நம்மில் முடிசூட்டப்படும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.