தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 18:1

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவில் தேவபெலன் தரித்தவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கிறிஸ்து மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்படுகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 9:1-10 

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.

உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.

நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.

ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.

சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று.

கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.

அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

மேற்கூறட்ட வசனங்களில் முடிசூட்டப்பட்ட கிறிஸ்து நமக்குள்ளில் இருந்து கர்த்தரை நோக்கி விண்ணப்பிக்கிறதான சங்கீதமாவது; கர்த்தரை முழு இருதயத்தோடு துதிப்பதும், அவர் அதிசயங்களை விவரிப்பதுமே நாம் கர்த்தருக்கு செய்ய வேண்டிய சேவையாகும்.  அவ்வாறு செய்வோமானால் நமக்கு விரோதமாக இருக்கிற சத்துருக்கள் சிதறுண்டு அழிந்து போவார்கள்.  அப்போது நியாயத்தையும் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறீர்.  அல்லாமலும் தேவன் ஜாதிகளை கடிந்துக்கொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர் என்று கர்த்தர் செய்கிற காரியத்தை சொல்லியும், ஜாதிகளின் நாமத்தை என்றன்றைக்கும் இல்லாதபடி ஆக்குகிறார் என்றும்; ஆதலால் சத்துருக்கள் என்றன்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினார் , அவர்கள் பேரும் அவர்களோடே ஒழிந்து போகிறது.  இவ்விதமாக கர்த்தர் செய்து அவர் என்றன்றைக்கும் நம்மில் இருக்கும்படியாக அவர் சிங்காசனத்தை  நியாயந்தீர்ப்புக்கு ஆயத்தம் பண்ணினார்.  அவர் நம்மை நீதியாய் நியாயந்தீர்த்து சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதி செய்வார்.  அல்லாமலும் சிறுமைபட்டவனுக்கு கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.  தேவனை தேடுகிறவர்களை அவர் கைவிடுகிறதில்லை; ஆதலால் அவர் நாமத்தை அறிந்தவர்கள் அவரையே நம்பியிருப்பார்கள்.  இத்தனை  காரியங்களும் தேவனாகிய கர்த்தர் நம்மில் செய்கிற காரியங்களை சொல்லியும்; பின்பு நாம் தேவனுக்காக செய்ய வேண்டியவைகள் 

சங்கீதம் 9:11 

சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.

அல்லாமலும் நாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டியது 

சங்கீதம் 9:12-14 

இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.

மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.

மேற்கூறபட்ட  வார்த்தைகளால் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணுவதும் 

சங்கீதம் 9:15-20 

ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.

கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)

துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)

மேற்கூறபட்ட வார்த்தைகளால்  கர்த்தரிடத்தில் மன்றாடி, கர்த்தாவே எழுந்தருளும், மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமூகத்தில் நியாயந்தீர்க்கபடக்

கடவர்கள்.  ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு அவர்களுக்கு பயமுண்டாக்கும், கர்த்தாவே என்று கிறிஸ்துவின் விண்ணப்பிக்குதலின் கர்த்தர் மனுஷனை பெலன் கொள்ளாதபடியும், தேவனே எல்லாவற்றிற்கும் பெலனாகவும் எழுந்தருளுவார். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் நம் உள்ளமானது ஆத்தும பெலன் பெற்று வாழும்படியாக தேவனுடைய ராஜ்யம் நம்மில் பெலனாக இறங்கும்படியாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.