தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 49:2

அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் சண்டாளர் உயராமல் நம்மை பாதுகாக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நீதிமானாக வாழ்கிறோமா என்று கர்த்தர் ஒவ்வொருவரையும் சோதித்தறிகிறார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 12:1-8 

இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.

அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.

ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.

கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.

மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் (செமினீத்தென்னும்  எண்ணரம்புக் கிண்ணாரத்தில் வாசிக்க இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) இந்த சங்கீதம் தியானிக்கும் போது முதல் வார்த்தையானது இரட்சியும் கார்த்தாவே, என்பது முதலில் நம் வாயிலிருந்து அனுதினமும் புறப்படுகிற வார்த்தையாக இருக்க வேண்டும்; என்னவென்றால் அனுதினமும்  மனுபுத்திரரின் பக்தி அற்றுபோகிறது என்றும், உண்மையுள்ளவர்கள் இவர்களில் இல்லை என்பதே.  அல்லாமலும் மனுபுத்திரர்கள் தங்கள் வாழ்வில் குறைந்திருக்கிறார்கள்.  எப்படியெனில் மனுபுத்திரர்கள் என்றால் அப்பா பிதாவே என்று கூப்பிடப்படுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்கள்; அவர்கள் கிறிஸ்துவின் ஆவியினால் மீண்டெடுக்கப்பட்டவர்கள் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள். இருமனமாய் இச்சக உதடுகளால் பேசுகிறார்கள். மேலும் பெருமையாய் பேசுகிறார்கள்.  இவ்விதம் பேசுகிறதால் நாவுகளால் எல்லாம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.  இதனால் ஏழை ஆத்துமாக்கள் பாழாக்கப்பட்டு எளியவர்கள் பெருமூச்சுவிடுகிறதினிமித்தம், கர்த்தர் எழுந்து அவர்களை சீறுகிறவர்களுக்கு அவனை காத்து சுகமாய் இருக்கபண்ணுவேன் என்று சொல்லுகிறார்.  எப்படியெனில் மனுபுத்திரர்கள் என்றால் அப்பா பிதாவே என்று கூப்பிடப்படுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியை பெற்றவர்கள்; அவர்கள் கிறிஸ்துவின் ஆவியினால் மீண்டெடுக்கப்பட்டவர்கள் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள். இருமனமாய் இச்சக உதடுகளால் பேசுகிறார்கள். மேலும் பெருமையாய் பேசுகிறார்கள்.  இவ்விதம் பேசுகிறதால் நாவுகளால் எல்லாம் மேற்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.  இதனால் ஏழை ஆத்துமாக்கள் பாழாக்கப்பட்டு எளியவர்கள் பெருமூச்சுவிடுகிறதினிமித்தம், கர்த்தர் எழுந்து அவர்களை சீறுகிறவர்களுக்கு அவனை காத்து சுகமாய் இருக்கபண்ணுவேன் என்று சொல்லுகிறார். மேலும் கர்த்தருடைய வார்த்தையாவது அவருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.  இந்த சொற்களால் அவர்களை கெடுக்கிற சந்ததிக்கு விலக்கி காத்துக்கொள்வீராக என்று கேட்கிறார்.  அல்லாமலும் மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும் போது துன்மார்க்கர் எங்கும் சுற்றி திரிவார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது, கிறிஸ்துவினால் மீண்டெடுக்கப்பட்ட நாம் நம்முடைய பக்தி அற்றுப்போகாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  அல்லாமலும் ஒரு போதும் பொய் பேசக்கூடாது, யாரிடத்திலும் இச்சக உதடுகளால் இருமனதாய் பேசுகிறார்கள்.  மேலும் பெருமையான வார்த்தைகள் பேசக்கூடாது என்பதும் நாம் கைக்கொள்ள வேண்டிய தேவனுடைய கட்டளை. இப்படியாக நம்மை இப்படிபட்ட சத்துருவின் கையிலிருந்து கர்த்தர் தம்முடைய சுத்தமான வசனத்தை நமக்குள் அனுப்பி பரிசுத்தப்படுத்த வேண்டும்.  மனுபுத்திரரில் சண்டாளம் உயர்ந்தால் துன்மார்க்க கிரியைகள் முழுமையும் நம்முடைய உள்ளத்தை வஞ்சிக்கும்.   இவ்விதம் கர்த்தர் மாறுபாடான சந்ததிக்கு விலக்கி நம் ஆத்துமாவை காத்துக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.