தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1சாமுவேல் 1:15 

அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டிசபையாகிய நாம் கர்த்தர் பேரில் மட்டும் மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் சண்டாளர் உயராமல் நம்மை பாதுகாக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 13:1-6 

கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனைபண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும்.

நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.

கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

மேற்கூறிய வசனங்களில் நம்முடைய இருதயம் சஞ்சலத்தால் நிறையப்படும்போது கிறிஸ்து நமக்காக தேவனிடத்தில் விண்ணப்பிக்கும் விதங்களையும், நாம் தேவனுடைய கிருபையின் மேல் முழு நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், அவருடைய இரட்சிப்பினால் நம்முடைய இருதயம் களிகூரும்படியாகவும் இருப்போமானால்; நம்முடைய சஞ்சலத்தை கர்த்தரிடத்தில் இருதயம் திறந்து ஊற்ற வேண்டும்; அவ்விதம் இருதயம் திறந்து ஊற்றும் போது கர்த்தர் நமக்கு நன்மை செய்கிறவராக வெளிப்படுவார். மேலும் அன்னாள் தன்னுடைய வாழ்வில் சஞ்சலத்தோடு காணப்பட்டாள்; ஆதலால் அவள் தன் இருதயத்தை கர்த்தரின் சந்நிதியில் ஊற்றி விட்டாள்.  அது போல் நாமும் நம்முடைய சஞ்சலம் நீங்க,  கர்த்தர் மேல் மட்டும் நம்பிக்கை வைத்திருப்போமானால், நம்முடைய சஞ்சலம் நீக்கப்பட்டு,  நம்மை இரட்சித்து நம்மை நன்மையால் நிரப்பி, புது பாட்டை நம்முடைய நாவில் தந்தருளுவார்.  ஆகையால் நாம் எப்போதும் கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்போமானால் பாக்கியவான்களாக காணப்படுவோம்.  அல்லாமலும் கர்த்தரிடத்திலிருந்து நன்மை பெற்றுக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.