தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நெகேமியா 12:43

அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்திலும், ஆத்துமாவிலும் களிப்பும், மகிழ்ச்சியும் உண்டாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டிசபையாகிய நாம் கர்த்தர் பேரில் மட்டும் மிகுந்த நம்பிக்கையுள்ளவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 14:1- 7 

 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

மேற்கூறபட்ட வசனங்களில் தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லுகிறதினால் , அப்படிபட்டவர்கள் தங்களைக் கெடுத்து அருவருப்பான கிரியைகளை செய்து வருகிறதினால் தேவனுடைய பார்வைக்கு நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை. ஆதலால் தேவனை தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்கும் படி கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரை கண்ணோக்குகிறார்.  அவர் கண்ணோக்கும் போது மனுபுத்திரர்கள் எல்லாரும் கர்த்தரின் வழியை விட்டு விலகி ஏகமாய் கெட்டு போனார்கள்.  நன்மை செய்கிறவன் ஒருவனாகிலும் இல்லை என்பதனைக் கண்டு, அவர் சொல்வது அக்கிரமக் காரருக்கு அறிவு இல்லையோ? அப்பத்தை பட்சிக்கிறது போல, என் ஜனத்தை பட்சிக்கிறார்களே என்று சொல்லி, அவர்கள் தேவனை தொழுதுக்கொள்ளுகிறதில்லை என்கிறார்.  ஆதலால் அவர்கள் மிகவும் பயந்தார்கள். கர்த்தர் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே.  நீதிமான் என்றால் கிறிஸ்துவும்; அவர் சந்ததி என்றால் அவர் இரத்தத்தால் மீட்கபட்ட நாம் ஒவ்வொருவரும்.  

பிரியமானவர்களே, நாம் அவர் சந்ததி என்றால் நிச்சயமாகவே நம்மோடேஅவர் எப்போதும் இருக்கிறவராகவே இருக்கிறார். அல்லாமலும் சிறுமைபட்டவர்களுக்கு அவர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி அவருடைய ஆலோசனையை அலட்சியம் பண்ணினவர்கள் தேவன் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொண்டவர்கள்.  சீயோனிலிருந்து (கிறிஸ்து) இஸ்ரவேலுக்கு (மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா)வுக்கு இரட்சிப்பு வருவதாக.  இவ்விதமாக கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பு (உ லகம், மாமிசம், பிசாசு) திருப்பும் போது யாக்கோபுக்கு களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்சியும் உண்டாகும். இப்படியாக நம்முடைய மனதின் சிறையிருப்பை உலகமாகிய கட்டுபாட்டிலிருந்து கர்த்தர் பரலோகத்திற்கு நேராக திருப்பும்படியாகவும், நம்முடைய வாழ்வில் களிப்பும் மகிழ்ச்சியும் பெருகும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.