தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 36:8

உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

 மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் நித்திய பேரின்பம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் என்றன்றைக்கும் கிறிஸ்துவினால்  அசையாமல் நிலைத்திருக்க வேண்டும்  என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 16:1-11 

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்,

பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும்.

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.

என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்.

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

மேற்கூறபட்ட வசனங்களில் கர்த்தரை நாம் எப்போதும் நம்பியிருப்பதினால் அவர் நம்மை காப்பாற்றுவார்.  நம்முடைய செல்வம் ஒன்றும் கர்த்தருக்கு வேண்டியதில்லை, ஆனால் அவை பரிசுத்தவான்களுக்கும், அவர் வேலையை உழைப்போடு எடுத்து செய்கிற மகாத்துமாக்களுக்கும் அது வேண்டியதாயிருக்கிறது.  அல்லாமலும் அந்நிய நாமத்தை நம்முடைய உதடுகளால் உச்சரிக்கவுங் கூடாது; அப்படியாக உள்ளவர்களுக்கு கர்த்தரிடத்தில் சிறப்பான சுதந்தரம் கிடைக்கும்.  அந்த சுதந்தரம் கிறிஸ்து.  தேவன் நம்முடைய வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நாம் அசைக்கப்படுவதில்லை. ஆகையால் நம்முடைய இருதயம் பூரித்து; கிறிஸ்துவாகிய மகிமை நம்மில் களிகூர்ந்து; அவர் மாம்சமும் நம்பிக்கையோடே நம்மில் தங்கியிருக்கும்.  அப்படியாக இருந்தால் தேவன் நம்மை பாதாளத்தில் விடமாட்டார்; பரிசுத்தவான்கள் அழிந்து போகமாட்டார்கள்.  மேலும் கர்த்தர் நமக்கு ஆலோசனை தந்து வழிநடத்துவார்.  இராக்காலங்களிலும் நம்முடைய உள்ளியந்திரியங்கள் நம்முடைய பாவங்களையும், குற்றங்களையும், அக்கிரமங்களையும், மீறுதல்களையும் உணர்த்தும். ஆதலால் பிரியமானவர்களே, நாம் தேவனிடத்தில் விண்ணப்பம் செலுத்த வேண்டியது ஜீவ மார்க்கத்தை எனக்கு தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.  ஆதலால் நாம் கர்த்தரிடத்தில் இதனை பெற்றுகொள்ள வேண்டும் என்ற வாஞ்சையோடு ஜீவமார்க்கத்தை (நித்திய ஜீவனை)  பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.