தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவ சாயல் பெற்றவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் நித்திய பேரின்பம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 17:1-10 

கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.

உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.

நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.

மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.

என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.

தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.

உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.

என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் நம்மில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவனிடத்தில் விண்ணப்பித்த விண்ணப்பமாவது நியாயம் கர்த்தரின் சந்நிதியிலிருந்து வெளிப்படும்படியாகவும், நம்மை நெருக்குகிற துன்மார்க்கருக்கும், பிராண பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னை காப்பாற்றும் என்றும், மற்றும் 

சங்கீதம் 17:11-12 

நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.

பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.

இதன் கருத்துக்கள் பாரப்பரிய பழக்கத்தினால் ஆத்துமா நிணந்துண்ணியிருக்கிறதால் வீம்பு பேசுகிறார்கள்.  சிங்கத்திற்கும்,  மறைவிடங்களில் பதுங்கியிருக்கிற பால சிங்கத்திற்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.  ஆதலால் கர்த்தாவே நீர் எழுந்திருந்து அவனை மடங்கடித்து, என் ஆத்துமாவை துன்மார்க்கருடைய கைக்கும் உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.  மேலும் மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கை பெற்றிருக்கிற உலக மக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் தப்புவியும் ; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளை தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். நானோ நீதியில் உம்முடைய முகத்தை தரிசிப்பேன்; நான் விழிக்கும் போது உமது சாயலால் திருப்தியாவேன்.  ஆதலால் பிரியமானவர்களே அநேகர் தங்கள் வாழ்வில் தேவனை அறிந்தும், பயமில்லாமல் பாரம்பரியம் களைந்து போடாமல் நடக்கிறார்கள்.  தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள். ஆதலால் நம் நடுவில் கர்த்தராகிய இயேசு நமக்காக தேவனிடத்தில் நம்முடைய ஆத்துமா அழிந்து போகாதபடி காப்பாற்றும்படியாக விண்ணப்பம் செய்கிறார்.  அதுமட்டுமல்லாமல் நம்மை உலக மக்களின் கட்டுபாட்டிலிருந்து விடுவிக்கும்படியாகவும் மன்றாடுகிறார்.  ஏனென்றால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் பிள்ளைகளுக்கென்று பொருள் சேர்த்து வைக்கிறார்கள்.  ஆனால் கிறிஸ்து நம்மிலிருந்து தேவனுடைய நீதியால் அவர் முகம் தரிசிக்கும்படியாகவும், அவர் விழிக்கும் போது நாமும் தேவசாயலால் திருப்தியடையும் படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.