தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் மரணகட்டுகள், பாதாள கட்டுகள் நம்மை சுற்றாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நம்முடைய இக்கட்டில் நாம் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து கர்த்தரை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய தேவனை நோக்கி அபயமிட்டால் அவர் செவிகளில் நம்முடைய கூப்பிடுதல் கேட்கப்படும்போது; அவர் நம்முடைய கன்மலையும், நம்முடைய கோட்டையும்,நம்முடைய இரட்சகரும், நாம் நம்பியிருக்கிற நம்முடைய  துருகமும், நம்முடைய கொம்பும், நம்முடைய உயர்ந்த அடைக்கலமாயிருக்கிறார்.  ஆதலால் நாம் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருப்போமானால் அவர் நம்மை எல்லாவித இக்கட்டுகளாகிய பாதாள கட்டுகள், மரண கட்டுகள் எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் நம்மை விடுவிக்கவல்லவராயிருக்கிறார். ஆதலால் கர்த்தரிடத்தில் மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.