தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 118:15

நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு மிகுந்த ஜல பிரவாகமாகிய போராட்டம் வரும் போது தேவன் நம்மை தப்புவிக்கிற விதம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதிகளில், மணவாட்டி சபையாகிய நாம் மரணகட்டுகள், பாதாள கட்டுகள் நம்மை சுற்றாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 18:1-10

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.

துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.

மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.

பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.

அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.

அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.

மேற்கூறபட்ட வசனங்களில் நம்முடைய இக்கட்டு காலங்களில் நாம் கர்த்தரை நோக்கி கூப்பிடும் போது, கர்த்தர் எவ்விதம் நம் உள்ளத்தில் இறங்குகிறார் என்பதும், அவர் கோபம் நம்முடைய பாரம்பரியத்தின் அஸ்திபாரத்தை குலுக்கினது என்பதும்  அவர் நாசியிலிருந்து புகை எழும்பி  அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது, அப்போது தழல் மூளுகிறது. வானங்களை தாழ்த்தி இறங்கி வரும் போது, அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.  கேரூபீன்கள் மேலேறி வேகமாய் சென்று, காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.  மேலும் அவர் இறங்கி வருகிற விதமாவது 

சங்கீதம் 18:11-14 

இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார்.

அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

மேற்கூறபட்ட வார்த்தைகள் பிரகாரம் அவர் இறங்குகையில் 

சங்கீதம் 18:15 

அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.

அவ்விதம் நம்முடைய உள்ளத்தின் ஆழங்கள் திறக்கப்பட்டு, அசுத்தங்களுக்கு நாம் நீங்கலாகிறோம்.  அப்போது நாம் கர்த்தரிடத்தில் நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, தேவன் உயரத்திலிருந்து கைநீட்டி நம்மை பிடித்து ஜலபிரவாகம் (போராட்டத்திலிருந்து) நம்மை தூக்கி விடுகிறார்.  

பிரியமானவர்களே,மேற்கூறபடுகிற பிரவாகம், நமக்கு போராட்டங்கள் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் போது,நாம் கர்த்தரின் சந்நிதியில் அபயமிட்டால் நமக்காக கர்த்தர் அத்தனை வேகத்தில் பறந்து வந்து விடுவிக்கிறார். ஆதலால் நம்முடைய போராட்டங்கள் நீங்கும்படி கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம்;  அப்போது அவர் நம்மை தூக்கி நிறுத்துகிறார்.  இப்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.   

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.