தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்36:12 

அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வெளிச்சத்தினால் சாத்தானுடைய கிரியை அழிக்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கைகளில் சுத்தம் உள்ளவர்களாக நடக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 18:25-31 

தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;

புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.

தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.

கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?

மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது கர்த்தர் தயவுள்ளவனுக்கு தயவாகவும்; புனிதமாய் நடக்கிறவர்களுக்கு புனிதராகவும்;உத்தமனுக்கு உத்தமனாகவும்; மாறுபாடுள்ளவனுக்கு மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.  ஆதலால் அவருக்கு கீழ்படிந்து தங்களை சிறுமைப்படுத்திக் கொள்கிறவர்களை அவர் இரட்சித்து உயர்த்துவா். மேட்டிமையுள்ளவனை  (சாத்தானுடைய கிரியையை) தாழ்த்தி நமக்குள் ஒரு விளக்கை ஏற்றுகிறார்; அந்த விளக்குதான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  மேலும் கர்த்தராகிய கிறிஸ்து மூலமாக நம்மில் இருக்கிற உலகமாகிய இருளை அகற்றி வெளிச்சமாக்குகிறார்.  அந்த வெளிச்சத்தினால் நாம் ஒரு சேனையாகிய சத்துருவினிடத்தில் பாய்ந்து சென்று ஜெயிக்க முடியும். அப்போது நாம் ஒரு மதிலை தாண்டுகிறோம். ஆதலால் பிரியமானவர்களே, நாம் எப்போதும் வெளிச்சத்தில் வெளிச்சத்தை காண்கிற பிள்ளைகளாக கர்த்தருக்காய் வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.