தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 51:1
நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவினால் புடமிட்டு பரிசுத்தமாக்கபட்டவர்களாக நற்பலனை பெற்றுக்கொள்வோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் வெளிச்சத்தினால் சாத்தானுடைய கிரியை அழிக்கிறவர்களாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம். அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
சங்கீதம் 18:30-33
தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
மேற்கூறபட்ட கர்த்தரின் வார்த்தைகளை நம் தியானிக்கும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு காட்டுகிற வழி உத்தமமானது. கர்த்தருடைய வசனம் நமக்காக புடமிடப்பட்டது; அதென்னவென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் அந்த வசனம். அவர் நமக்காக, நம்முடைய பாவ சாப அக்கிரமங்களுக்காக புடமிடப்பட்டார். அவரை நம்புகிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவரையல்லாமல் ஒரு தேவன் நமக்கு இல்லை. அவரே நம்முடைய கன்மலையானவர். அவர் நம்மை பலத்தால் இடைக்கட்டி நம்முடைய வழியை செவ்வைப்படுத்துகிற தேவனாயிருக்கிறார். இவ்விதமாக நம்மோடு கிறிஸ்து உண்டெங்கில் மட்டும் தான் தேவன் இப்படியாக நம்மில் உள்ள தம்முடைய குமாரனுக்கு உதவியாக கைக்கொடுக்கிறார். கிறிஸ்துவின் சங்கீதம் தான் இவ்விதமாக பாடலாகப் பாடப்படுகிறது. அவருடைய கால்களை மான்களின் கால்கள் போலாக்கி கிறிஸ்துவை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறார். இப்படியாக பிரியமானவர்களே, நாம் கிறிஸ்துவோடு இணைக்கபட்டால் தேவன் நம்மை இவ்விதமாக வழி நடத்தி செல்கிறார். இப்படியாக நம்மை தேவன் கிறிஸ்துவோடு ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.