தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 1:46,47 

அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது.

என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அக்கிரம செய்கைகளை விட்டு இரட்சிப்பில் களிகூர்ந்து மகிழ வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் காருணியம் என்னும் கேடகம் நம்மை சூழ கர்த்தர் காக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 6:1

கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.

மேற்கூறபட்ட வார்த்தைகள் நெகினோத் என்னும் வாத்தியத்தில் செமினீத் என்னும் இராகத்தால் வாசிக்க இராகவ தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.   இந்த பாடலானது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் அதிசயவண்ணமாக வார்த்தையால் தோன்றுகிறார்.  அப்போது நாம் செய்கிற குற்றங்களுக்காக கர்த்தர் நம்மை கடிந்துக் கொண்டு தண்டிக்கிறவர் நம்முடைய கர்த்தர்.  ஆதலால் இயேசு பிதாவினிடத்தில் நமக்காக, நம்முடைய ஆத்துமாவுக்காக பிதாவினிடத்தில் மன்றாடுகிற விதமாவது 

சங்கீதம் 6:2-4 

என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது.

என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர்.

திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.

மேற்கூறபட்ட வார்த்தைகளினால் மன்றாடி, ஆத்துமாவிற்கு இரட்சிப்பு  இல்லாவிட்டால் ஆத்துமா மரிக்கும் என்பதனை உணர்த்தி, மரணத்தில் உம்மை யாரும் நினைவு கூறமுடியாது என்றும், பாதாளத்தில் யாரும் உம்மை துதிக்க முடியாது.  ஆதலால் நமக்காக கிறிஸ்து படுகிற துயர வேதனையை 

சங்கீதம் 6:6,7 

என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

துயரத்தினால் என் கண்கள் குழிவிழுந்துபோயிற்று; என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று.

இந்த வார்த்தைகளை தேவனிடத்தில் பகிர்ந்துக் கொண்டு, நம் உள்ளத்தின் அக்கிரம செயல்களை கர்த்தர் அகன்று போக கட்டளையிட்டு 

சங்கீதம் 6:8,9-ல் 

அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.

நம்முடைய பொல்லாத செயலை மாற்றவும், நமக்காக கண்ணீரோடு பிதாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினதால்;  கர்த்தர் அவர் அழுகையின் சத்தத்தை கேட்டு என் விண்ணப்பத்தை கேட்டு, கர்த்தர் என்னை ஏற்றுக்கொள்வார் என்று கூறுகிறார்.  அப்போது நம்மில் உள்ள பகைஞர் எல்லாரும்  வெட்கி கலங்கி போவார்கள்; அவர்கள் பின்னாக திரும்பி சடுதியில் வெட்கப்பட்டு போவார்கள்.  அப்போது நம்முடைய ஆத்துமா இரட்சிப்பினால் களிகூரும். ஆதலால் பிரியமானவர்களே நம்முடைய ஆத்துமா சத்துருவின் கையிலிருந்து விடுதலையாகப்பட்டு கிறிஸ்துவினால் இரட்சிப்பில்  களிகூரும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.