தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 96:4
கர்த்தர் பெரியவரும்,
மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர்
அவரே.
கிருபையானது உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறவர் :-
கிறிஸ்துவுக்குள்
பிரியமானவர்களே, முந்தின நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் நம்முடைய தேவன், மோசேக்கு
முட்செடியின் நடுவில் நின்று தரிசனமாகிறதை பார்த்தோம். அந்த தரிசனம் நம்முடைய வாழ்க்கைக்கு
ஒரு முக்கியமான தரிசனமாக இருக்கிறது. ஏனென்றால் எகிப்தின் அடிமையில் இருக்கிற இஸ்ரவேலரை
விடுதலையாக்கும் படியாக தேவன் முட்செடியில் நின்று அழைக்கிறார். அதற்கு காரணமென்னவென்றால்
நிச்சயமாக நம் உள்ளத்தில் இருக்கிற உலக கவலை, உலக ஆசை, உலக இன்பங்கள் எல்லாவற்றையும்
அழிக்கும்படியாகவே தேவன் முட்செடியில் நின்று தரிசனமாகிறதை பார்க்கிறோம். நம் ஆத்துமாவின்
இரட்சிப்பை இது திருஷ்டாந்தபடுத்துகிறது.
இஸ்ரவேல் ஜனங்களை
எகிப்திலிருந்து மீட்டுக் கொண்டு வரும்படியாக, நம்முடைய தேவன் மோசேயை அனுப்புவதும்,
அவனோடே கூட தேவன் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பதும் நம்முடைய ஆத்துமா பாவக்குழியில்
சிதறிக்கிடக்கிறதை தேவன் விடுவித்து நம்மை தேவ சந்நிதியில் இருத்தும் படியாகவே தேவன்
மோசேயை வைத்து பழைய ஏற்பாட்டில் நமக்கு தெளிவுபடுத்துகிறார். அதைதான்,
சங்கீதம் 97:1-7
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்;
பூமி பூரிப்பாகி திரளான தீவுகள் மகிழக்கடவது.
மேகமும் மந்தாரமும்
அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும்
அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
அக்கினி அவருக்கு
முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய
சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது.
அவருடைய மின்னல்கள்
பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது.
கர்த்தரின்
பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே
உருகிப்போயிற்று.
வானங்கள் அவருடைய
நீதியை வெளிப்படுத்துகிறது, சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
சொரூபங்களை
வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இவ்விதமாக தேவன்
நம் உள்ளில் பிரகாசிப்பாரானால் நம் உள்ளம், தேவனுக்கு பிரியமில்லாத அத்தனை சத்துருக்களின்
கிரியைகளை மாற்றி, தேவன் நம்மை சுத்திகரிப்பார். அப்போது நம் இதயத்தில் உள்ள விக்கிரகங்கள்,
சொரூபங்கள் தேவனை தவிர வேறு தேவர்களை (உள்ளத்தில் வைத்திருக்கிற எல்லா பொல்லாத சுபாவங்களும்)
அழிக்கப்படும். அப்போது தேவன் அவருடைய சிங்காசனத்தில் மகிமை படுவார். அவருடைய சிங்காசனம்
நம் உள்ளத்தில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் நாம் பாவத்துக்கு
அடிமையாக வாழும் காலத்தில் பார்வோனுடைய சிங்காசனம் இருக்கிறது. தேவன் பார்வோனுடைய தலைச்சன்கள்
யாவையும் சிங்காசனத்திலிருந்து மோசே, ஆரோன் என்பவர்களை வைத்து வாதைகளை அனுப்பி அத்தனையும்
அழித்து தான் இஸ்ரவேலரை மீட்டு எடுக்கிறார். காரணம் என்னவென்றால் சிங்காசனம் தேவனுடையது.நீதியும்,
நியாயமும் சிங்காசனத்தின் ஆதாரம்.
நம்முடைய இருதயம்
நீதியும், நியாயமும் நிறைந்ததாக இருக்க வேண்டும்.
எரேமியா 17:9-12
எல்லாவற்றைப்பார்க்கிலும்
இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
கர்த்தராகிய
நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும்,
இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
அநியாயாயமாய்
ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற
கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான்.
எங்கள் பரிசுத்த
ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள
சிங்காசனமாயிருக்கிறது.
அதனால் தேவன்
நம்மிடத்தில் எப்படி கேட்கிறாரென்றால்,
ஏசாயா 66:1-2
கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக்
கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
என்னுடைய கரம்
இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்;
ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
பிரியமானவர்களே
கைகளால் செய்யப்பட்ட ஆலயத்தில் தேவன் வாசம் பண்ணுவதில்லை .நாமே அவர் தாங்குகிற ஆலயமாக
வாசம்பண்ணுகிற வாசஸ்தலமாக மாறவேண்டுமென்பது தான் அவருடைய சித்தமாயிருக்கிறது. அதற்கு
தான் ஒவ்வொரு நாளும் பரலோக மன்னாவாகிய தேவ வசனத்தை நமக்கு தந்து போஷிக்கிறவராகக் காணப்படுகிறார்.
அதனால் தான் நாம் வசனத்தால் கட்டப்பட்ட ஆலயமாக விளங்க வேண்டும். அதில் தான் நீதியும்,
நியாயமும் இருக்கும். அது தான் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். அதனால் தான் தேவன் சொல்லுகிறார்
என் வசனத்துக்கு நடுங்குகிறவனையை
நோக்கிப் பார்ப்பேன் என்று, வசனத்தாலும், ஜெபத்தாலும் ஆலயம் கட்டப்படுமானால் அவருடைய
மகிமை விளங்கும்.
சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய
மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
வானங்கள் என்று
சொல்வது, தேவனுடைய இரட்சிப்பை பெற்று, வசனத்தால் நிறைந்து, நீதியையும், நியாயத்தையும்
தங்கள் உள்ளத்தில் நாட்டுகிறவர்கள் வானங்கள்.
இவர்களில் , தேவனுடைய மகிமையை விளங்கிக் கொண்டிருக்கும்.
பூமி என்று
சொல்வது, தேவனால் இரட்சிக்கபட்டும் தங்கள் உள்ளம் முழு மாற்றம் அடையாதவர்கள் நீதியும்,
நியாயமும் அவர்களிடத்தில் குறைவாயிருக்கும்.
ஆகாயவிரிவு
என்பது, தேவனுடைய மகிமையில் நம் உள்ளம் நிறையப்படும் போது கிறிஸ்துவாகிய மணவாளன் அங்கு
மகிமைப்படுவார். மணவாளன் எங்கு உண்டோ அங்கு மணவாட்டி உண்டு. (பரிசுத்த ஆவியானவர்) அதை
தான் ஆகாயவிரிவு அவருடைய கரங்களில் கிரியை அறிவிக்கிறது. நம்முடைய தேவனுடைய கிரியைக்குறித்து பரிசுத்த
ஆவியானவர் எப்போதும் நமக்கு போதிக்கிறவராக காணப்படுகிறார்.
அதனால் தேவன்
வானம் எனக்கு சிங்காசனம், பூமி
எனக்கு பாதப்படி . ஆனால் நீங்கள் எனக்கு கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது
என்று கேட்பதற்கு காரணம் இதுதான் என்பது நமக்குத் தெரிய வேண்டும்.
தேவன் நம்மளில்
ராஜரிகம்
பண்ணுகிறவர்.
சங்கீதம் 96:9-10
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு
முன்பாக நடுங்குங்கள்.
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்,
ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்;
அவர் ஜனங்களை
நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
பிரியமானவர்களே
நம்மிடத்தில் இருக்கிற துர்கிரியை ,பொல்லாங்கனுடைய கிரியை, தேவனுடைய வீட்டிற்கு மாறாக
இருக்கிற எல்லா பொல்லாத காரியங்களை அழிக்கும் படியாகவே தேவன் ராஜரிகம்
பண்ணுகிறார். அதை தான் தேவன்
மோசேயிடம் தெளிவுபடுத்துகிறார். எகிப்தியரை வாதைகளால் நியாயந்தீர்க்கிறார். நம்முடைய
தேசங்களும் இந்த நாளில் வாதைகளாலும், கொள்ளை நோயாலும் பாதிக்கப்படுகிறது என்றால் தேவனுடைய
நியாயத்தீர்ப்பு என்று நமக்குத் தெரிந்து இந்த நாளில் தேவ வசனமாகிய சத்தியத்தை அரையிலே
நாம் கட்டிக்கொண்டு தேவனுடைய மகிமை விளங்கிய ஆலயமாக நாம் யாவரும் மாறுவோம். மற்றவர்களுக்கும்
நாம் அறிவிப்போம் யாவரும் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அதை தான்,
சங்கீதம் 96:11-13
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும்
அதின் நிறைவும் முழங்குவதாக.
நாடும் அதிலுள்ள
யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
அவர் வருகிறார்,
அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும்
நியாயந்தீர்ப்பார்.
பிரியமானவர்களே
இந்த நேரத்தில் நீங்கள் வாசிக்கிற வேத பகுதிகளை பொறுமையோடும், கருத்தோடும், தேவ ஆவியோடும்
வாசித்து, நம்மை ஒப்புக்கொடுப்போமானால் எவ்வித துன்பமும், வாதைகளும் கொள்ளை நோயோ வராதபடி
தேவன் நம்மை எல்லா இக்கட்டுகளிலிருந்து நீங்கலாக்கி இரட்சிப்பார். யாவரும் ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.