தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 26:8

கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் இரத்த பிரியராகவோ, சூதுள்ள மனுஷர்களாவோ இருக்கக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய நெருக்கம் மாற அந்திசந்தி மத்தியான வேளைகளில் தேவனை தியானம்பண்ண  வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

சங்கீதம் 55:18-23 

திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.

ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.)

அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

மேற்கூறபட்ட வசனங்களில் நமக்கு சத்துருக்களாக இருந்து நம்மில் நெருக்கமும் இடுக்கமும்  உண்டாக்குகிறர்கள் நம் உள்ளத்தில் திரளான கூட்டத்தார் என்பதும், அவர்கள் நமக்கு விரோதமாக எழும்பியிருக்கிறதால் அவர்கள் போரை நீக்கி நம் ஆத்துமாவை கிறிஸ்து மீட்டு விட்டு விட்டார் என்று ஆதிமுதலாய் வீற்றிருக்கிற நம்முடைய தேவன் கேட்டு அவர்களுக்கு பதிலளிப்பார்.  மேலும் மீட்கபட்டவர்களாக இருக்கிறவர்கள் தங்களில் எந்த மாறுதல்கள் இல்லாமல் இருக்கிறதால் அவர்கள் தேவனுக்கு பயப்படாமற் போகிறார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த உடன்படிக்கையை மீறுகிறார்கள்  இப்படியாக இருக்கிறவர்களை குறித்து கர்த்தர் சொல்வது என்னவென்றால் 

சங்கீதம் 55:21 

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

மேற்கூறபட்டவைகள் உள்ளவர்கள் நம்முடைய வாழ்வில்  இடுக்கமும், நெருக்கமும் உண்டாக்கினால் கர்த்தர் சொல்வது 

சங்கீதம் 55:22 

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.

இப்படியாக நாம் கர்த்தர் மேல் பாரத்தை வைப்போமானால், கர்த்தர் நம்முடைய சத்துருக்களை அழிவின் குழியில் இறங்க பண்ணுவார்.  இரத்தபிரியரும், சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையாகிலும் பிழைத்திருக்க மாட்டார்கள்.  நாமோ கர்த்தரை மட்டும் நம்பியிருக்கிறவர்களாக இருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.