தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 12:21

நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் தேவனால் பழிவாங்காதபடி நம்முடைய துன்மார்க்கத்தை விட்டு விடவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய  நாம் சத்துரு வெட்டின குழியில் விழாதபடி நம்மை பாதுகாக்க கர்த்தரை புகழ்ந்து போற்றி துதிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 58:1-3

மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ?

மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள்.

துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள்.

மேற்கூறபட்ட வசனங்களில் தான் கெட்டுபோகாதபடிக்கு அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க தாவீது பாடி இராகதலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட மிக்தாம் என்னும் சங்கீதமாவது மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியை பேசுவீர்களோ? மனுபுத்திரரரே, நியாயமாய் தீர்ப்புசெய்வார்களோ? என்று கேட்பது என்னவென்றால் பாவஞ் செய்கிறவர்கள் மனதார நியாயக்கேடு செய்கிறார்கள். அவர்கள் பூமியில் இருக்கும் போது தங்கள் கைகளில் கொடுமை இருக்கிறது என்றும்; அவர்கள் மற்றவர்களுக்கு அதனை நிறுத்துக்கொடுக்கிறார்கள் என்கிறார்.  மேலும் துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் உற்பவித்திதது  முதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பி போகிறார்கள் என்றால் தாயின் கர்ப்பம் என்றால் கிறிஸ்துவின் சபைக்குள் வந்தாலும்; அங்கிருந்து கர்த்தரின் வசனங்கள் கேட்டும் தங்கள் பொல்லாத வழிகளையும், மாம்ச இச்சைகளையும் விட்டு விடாமல் தங்கள் மனம் போன போக்கில் நடந்துக் கொண்டு கிறிஸ்துவினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, பழைய பாவ வாழ்வை விட்டு விடாமல் இருந்து, வாழ்கிறவர்களை குறித்து கர்த்தரின் வசனம் சொல்கிறது 

சங்கீதம் 58:4-11 

சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது.

பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.

தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும்.

கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.

கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக.

முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார்.

பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.

அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

மேற்கூறிய கர்த்தரின் வார்த்தைகள் பிரகாரம் தேவன் துன்மார்க்கனிடத்தில் பழிவாங்குகிறார்.  அப்பொழுது மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.  ஆகையால் பிரியமானவர்களே, மேற்கூறபட்ட வசனங்கள் பிரகாரம் நாம் பார்த்து நம்முடைய பாவ வழிகளையும், துன்மார்க்க கிரியைகளையும் விட்டு விட்டால் தேவன் கையால்  பழிவாங்காமல் நம்மை தப்புவித்துக்கொள்ளமுடியும்.  இப்படியாக தேவன் நம்மை பழிவாங்காமல் இருக்க துன்மார்க்கத்தை விட்டு நாம் நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.