தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 2:31,32

தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின

உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நம்முடைய ஆத்துமாவில் கர்த்தருடைய இரட்சண்யம் விளங்கும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மிடம் அக்கிரம சிந்தை இல்லாவிட்டால் அவர் நம்மை கைவிடமாட்டார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 67:1-7 

தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,

தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)

தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.)

தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

மேற்கூறிய வசனங்களில் நமக்குள் (எல்லா ஜாதிகள்) இரட்சண்யம் விளங்கும், ஆதலால் எல்லா ஜனங்களும் கர்த்தரை துதிப்பார்கள். அவ்விதம் கர்த்தரை துதித்தால் பூமி தன் பலனை தரும்; தேவனாகிய நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.  பூமியில் உள்ளவர்களெல்லாரும்  அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  இப்படியே மேற்கூறிய பிரகாரம் நாம் நடந்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.  அவ்விதம் ஆசீர்வதிக்கபடும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.