தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எபிரெயர் 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.
அல்லேலூயா.
பூமியின் நியாயத்தீர்ப்பு:-
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்ததான வேதப் பகுதியில் நம்முடைய தேவன் வசனமாகிய சகல சத்தியத்தாலும் நம்மளில் தேவனுடைய ஆலயமாகிய ,தேவனுடைய வாசஸ்தலத்தை கட்டுகிறார் என்று பார்த்தோம். ஆனால் தேவன் நம்மிடம் எனக்கு எப்படிப்பட்ட ஆலயம் கட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்.
பிரியமானவர்களே நாம் தேவனுக்கு எப்படிப்பட்ட ஆலயத்தை கட்டுகிறோம். இந்த ஆலயம் கட்டுகிற இடம் தான் நம்முடைய உள்ளம். வானம் எனக்கு சிங்காசனம் என்றும் பூமி எனக்கு பாதப்படி என்றும் நம்முடைய கர்த்தர் சொல்லுகிறார். வானத்தைப் பற்றி கழிந்த நாளில் தியானித்தோம். ஆனால் பூமி யார்? பூமியை பற்றிய சில காரியங்களை தியானித்தோம். இப்போது தியானிக்கப் போகிறோம். பூமியானது, நம் இருதயம், நீதி, நியாயத்தை அசட்டை பண்ணி; மனம் போன போக்கில் இந்த பூமிக்கு ஒத்த வேஷம் தரிப்பவர்கள் தான் என்பது நமக்குத் தெரிய வேண்டும்.
சங்கீதம் 96:13
அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார். என்னவெனில் அவர் வருகிறார் என்றால் பலவருஷம் கழித்து அல்ல என்பதை நாம் சிந்திக்க வேண்டும்
கர்த்தர் சொல்கிறார்,
ரோமர் 2:6-7
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
சோர்ந்து போகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
நாம் ஒவ்வொருவரும் இப்போதே இவ்வுலகில் வைத்தே நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும். தேவன் நியாயத்தீர்ப்புக்கு காரணம் என்ன வென்றால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது,
ரோமர் 1:5-6
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினை நாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.
ரோமர் 2:8
சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிர கோபாக்கினை வரும்.
நாம் ஒருவருக்கொருவர் சண்டைப்பண்ணிக் கொள்வோமானால் தேவனுடைய உக்கிர கோபாக்கினை நம் மேல் வரும், தேவன் நம்மை நிச்சயமாய் நியாயம் தீர்ப்பார்.
மேலும் நம் நடத்தைகள் (தேவனை ஏற்றுக் கொண்டவர்கள்) பொல்லாத நடத்தை உள்ளவர்களாக இருக்குமானால் தேவன் நம்மை நியாயத்தீர்ப்பார்.
தேவன் நம்மை பரிசுத்தப்படுத்தும் படியாக ,தேவன் நியாயந்தீர்த்து நம்மை தண்டிக்கிறார். தேவன் யாரைல்லாம் தண்டிக்கிறார் என்றால்,
ரோமர் 1:29-32
அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மேல் தேவனுடைய கோபாக்கினி வரும். இவர்களை தேவன் அதிகமாக நியாயந்தீர்க்கிறவராக இருக்கிறார். காரணமென்ன வென்றால் தேவனுடைய இரக்கத்தால் மீட்கப்பட்டும், மீண்டும் செய்யக்கூடாது என்று தெரிந்தும் தேவனுக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்கள் நியாயம் தீர்க்கபடுவார்கள். அதனால்,
எபிரெயர் 12:7-9
நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால், நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
பிரியமானவர்களே நம்முடைய தேவன் நாம் பரிசுத்தத்திற்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மை சிட்சிக்கிறார்.
எந்த சிட்சையும் தற்காலம் நமக்கு- சந்தோஷம் இல்லாமல் துக்கமாய் காணப்படும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனை தரும்.
ஆகையால் நெகிழ்ந்த கைகளையும், தளர்ந்த கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப் போகாமல் சொஸ்தமாகும் படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளை செவ்வைப்படுத்துங்கள்.
எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
பிரியமானவர்களே இப்போது நாம் வாசிக்கும் வேதப் பகுதியில் நமக்கு என்ன தெரிகிறது, தேவனால் இரட்சிக்கப்பட்டும், தேவனுக்கேற்ற நீதி, நியாயங்களை நம்முடைய இருதயங்களில் நடப்பிக்காமல், மற்றவர்களுக்கு முன்பாக நம் சாட்சி கெட்டுப்போய் இருப்பதினால், நாம் தேவனுக்கு துரோகம் பண்ணுகிறோம். பலமுறை நம்மை தேவன் உணர்த்தியும், கண்டித்தும் கீழ்படியாமல் தேவனுக்கு மாறான காரியங்களை நாம் செய்வதினால் அவருடைய பிரமாணம், அவருடைய கட்டளை, கற்பனைகளுக்கு கீழ்படியாமல் இருக்கிறதினால் தேவனுடைய தீர்ப்பு பலமுறை தேவன் நம்மைத் தண்டித்தும், சிட்சித்தும் பிரயோஜனமில்லாமல் தேவனுக்கேற்ற பரிசுத்தம் இல்லாமல் இருக்கிறதினால் தேவன் நியாயத்தீர்ப்பின் அக்கினியை நம் மேல் கொழுத்துகிறார். அதைதான்,
லூக்கா 12 :49
பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
பிரியமானவர்களே இந்த நாட்களில் நம் ஒவ்வொருவர் மேலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அக்கினி எரிகிறது. அதனால் நம்மை அதிகமாக பரிசுத்தபடுத்துகிற நாளாகயிருக்க வேண்டும். அதற்கு தான் தேவன் இந்த நாட்களில் வருகிறார் என்று தெரியவேண்டும்.
எபிரெயர் 12:28-29
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
பிரியமானவர்களே இந்த நாட்களில் தேவன் நம் ஜெபத்தை கேட்க வேண்டுமானால் தேவனுடைய கிருபையின் படியும், சத்தியத்தின்படியும் நடந்து, பரிசுத்தமாகுங்கள் ,யாவரும் பரிசுத்தமாகுவோம்.
சங்கீதம் 98:9
அவர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார், பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.
தேவன் இந்த நாட்களில் நம்மை பரிசுத்தப்படுத்தி அவருடைய சொந்த பிள்ளையாக மாற்றும்படி யாவரும் ஒப்புக் கொடுத்து ஜெபிப்போம்.
கர்த்தர் நம் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார். யாவருக்கும் சமாதானம் பெருகும்.
-தொடர்ச்சி நாளை.