தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 55:3

உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்தும சிறையிருப்பை தேவன் மாற்றுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய  நம்முடைய ஆத்துமாவில் தேவ ராஜ்யம் வரவேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

சங்கீதம் 70:1-5 

தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.

ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.

உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

மேற்கூறபட்ட வசனங்கள் நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கபட்ட சங்கீதம்.  இந்த சங்கீதம் நம்முடைய ஆத்துமா சிறைபடுத்தபட்டிருக்கும் போது, கர்த்தரிடத்தில் ஆத்துமா விடுதலையாக வேண்டுமென்று விண்ணப்பிக்கிற விண்ணப்பம் கூறப்படுகிறது.  இவ்விதம் நாம் கர்த்தரை தேடுவோமாகில் கர்த்தரில் மகிழ்ந்து சந்தோஷப்படுவோம்; தேவனுடைய இரட்சிப்பில் பிரியப்படுகிற நாம் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வோமாக.  மேலும் கர்த்தரிடத்தில் நம்மை மிகவும் சிறுமைப்படுத்த வேண்டும்; எப்படியெனில் நானோ சிறுமையும், எளிமையுமானவன்; தேவனே என்னிடத்தில் தீவிரமாய் வாரும்; நீரே என் துணையும், என்னை விடுவிக்கிறவருமானவர்; கர்த்தாவே தாமதியாதேயும்.  

பிரியமானவர்களே, நாம் தேவனுடைய இரட்சிப்பில் பிரியப்படுவோமானால் அவர் தாமதமில்லாமல் நம்மை இரட்சித்து விடுவிக்கிறவர் என்பதனை அறிந்து கர்த்தரிடத்திலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.