Jul 18, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

ஏசாயா 57:19

தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன், அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

சமுத்திரம் என்பது பற்றி சில விளக்கங்கள் 2:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் சமுத்திரம் என்பதை பற்றிய சில கருத்துக்களை தியானித்தோம். சமுத்திரம் என்பது நமது துன்மார்க்கமான வாழ்க்கையை காட்டுகிறது. நம்முடைய தேவனாகிய கர்த்தர்  நம் இருதயத்தில் இருக்கிற துன்மார்க்கங்களை ஒழிய பண்ணுகிறார். அவர் எப்படி ஒழிய பண்ணுகிறாரென்றால் தேவனுடைய வார்த்தையானது அக்கினியாக நம் உள்ளத்தில் வந்து துன்மார்க்கக் கிரியைகளை சுட்டெரிப்பார். மேலும் கர்த்தர் யாருக்கெல்லாம் துன்மார்க்கத்தை சுட்டெரிப்பாரென்றால், அவர் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகளை கேட்டு விசுவாசித்து கீழ்ப்படிகிறவர்களுக்கு தேவன் துன்மார்க்க கிரியைகளை சுட்டெரிப்பார். துன்மார்க்கரை நீதிமானாக்குகிறவரும் நீதிமானை துன்மார்க்கர் ஆக்குவதும் நம் தேவன். தேவ சத்தம் கேட்டு கீழ்படிகிறவர்களை அவர் நீதிமானாக்கிக் கொண்டு இருக்கிறார். ஆனால் தேவ சத்தம் கேட்டும் உலக மோகங்களோடு சிக்கி வாழ்கிறவர்கள் உள்ளத்தில் துன்மார்க்கர்கள் பெருகிக் கொண்டிருப்பார்கள்.

பிரியமானவர்களே நம் இருதயம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நம் தேவன் விரும்புகிறார். ஏனென்றால் மனுஷனுடைய இருதயம் பொல்லாததாய் இருக்கிறது. எல்லா மனுஷர்களும்  இரட்சிக்கப்பட வேண்டும். என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இப்பூமியிலே மனுஷர்கள் அழிந்து நித்திய ஆக்கினையை அடையாதப்படி காக்கவே நம் பிதாவாகிய தேவன் அவருடைய ஒரே பேறான குமாரனென்றும் பாராமல் நமக்கு நித்திய ஜீவனை தரும்படிக்கே இவ்வுலகில் அனுப்பினார்.

மேலும் அனுப்பினது மட்டுமல்லாமல் முழுமையும் நமக்காக அவரை பாடுகளுக்குட்படுத்த ஒப்புக்கொடுத்தார். அவர் தன்னை தான் தாழ்த்தி ஒப்புக்கொடுத்தபடியினால் பிதாவாகிய தேவன் அவருடைய மகிமையினாலே அவரை எழுப்புகிறார். என்னவென்றால் நாமும் அமிழ்ந்து போகாதபடி நம்மை காத்து அவர் ராஜ்யத்தில் தன் குமாரன் மூலம் சேர்த்துக் கொள்கிறார்.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் நான் உலகத்தை ஆக்கினைக்குள்ளாக்கும் படியாக வரவில்லை உலகத்தை இரட்சிக்கவே வந்தேன். நம் இருதயம் பொல்லாததாருக்கிறது என்பதை,

மாற்கு 7:20-23

மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 

களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும்.

பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.

இப்போது நாம் வாசிக்கிற பகுதி மனுஷனுடைய இருதயத்தில் உள்ள பொல்லாதானவைகள் இவையெல்லாம் துன்மார்க்கத்தை காட்டுகிறது. ஏனென்றால் ஒரு சமுத்திரத்தின் உள்ளால் நாம் பார்க்கும் போது காட்டு மிருகங்கள் போக ஓரளவு மற்ற எல்லாப் பிராணிகளும், நல்லவைகளும்,

பொல்லாதவைகளும் அங்கு உண்டு.

சமுத்திரம் தேவன் எதற்கு எடுத்துக் காட்டுகிறாரென்றால் நம் உள்ளத்திலும், நீதியும், அநீதியும் உண்டு. நீதி, நீதிமானுக்குரியது. அநீதி, துன்மார்க்கனுக்குரியது.

அதனால் தான் தேவன் நம்மையும் சமுத்திரத்திற்கு ஒப்பிடுகிறார். நம் இருதயத்தில் இருக்கிற மேற்கூறிய காரியங்களை எல்லாம் விட வேண்டும் என்று நினைத்து விட்டுவிடுவோம். ஆனால் பெரும்பாலும் விட்ட காரியம் மீண்டும் நம் உள்ளத்தில் வரும். அதைத்தான் சமுத்திரத்தில் அலைகள் ஒரு போதும் முடிவடைவதில்லை. அதனால் தேவன் சமுத்திரத்திற்கு எல்கை குறிக்கிறார். நம் துன்மார்க்க வாழ்க்கையிலும் ஒரு எல்கை உண்டு அதற்குள் அடங்கி தேவனுடைய கரத்தில் நாம் விழுவோமானால் தேவன் துன்மார்க்கத்தை நம்மளில் இருந்து மாற்றிவிடுகிறார். அதைத்தான்,

சங்கீதம் 37:34-38

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.

கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்: பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.

நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.

அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

பிரியமானவர்களே இந்த வார்த்தைகளை நாம் நம்முடைய உள்ளத்தில் மிகவும் கருத்தோடு தியானிக்க வேண்டும். சில இருதயமாகிய நிலத்தில் துன்மார்க்கன் பச்சை மரத்தை போல தழைத்து வளருவான். நம் தேவன் யாரையும் வெறுக்கிறவர் அல்ல. அவர் சித்தம் செய்கிறவர்களை மிகவும் நேசிக்கிறவர். நாம் நினைப்போம் துன்மார்க்கர்கள் என்று சொல்லும் போது மற்றவர்களை நினைப்போம். பிரியமானவர்களே அப்படியல்ல நம்மையே நாம் சோதிக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார்.

லூக்கா 5:32

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.

பிரியமானவர்களே நாம் நம்மை நீதிமானாக எண்ணி விடக்கூடாது. நம்மை நீதிமான் என்றும் மற்றவர்களை துன்மார்க்கன் என்றும் நினைத்து நாமே ஏமாந்து போகாதபடி நம் உள்ளத்தில் இருக்கின்ற செயல்கள், நினைவுகள் எல்லாம் நம்மை நாமே சோதித்து அறிந்து நம்மை சீர்திருத்தி 

கொள்வோமானால்,

சங்கீதம் 37:39-40

நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.                          ஏனென்றால் நம் உள்ளத்தில் பல தோற்றங்கள் உண்டாயிருக்குமானால் அது பரஸ்தீரியின் கிரியை நடந்து கொண்டிருக்கிறது என்று நாம் புரிந்து பரஸ்தீரிக்கு விலகி துன்மார்க்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் ஒரே நோக்கம் பரலோகம் என்ற சிந்தனை மாத்திரம் இருக்குமானால் அது நீதி.

சங்கீதம்  37:30

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

ஆனால், துன்மார்க்கன் நீதிமான் மேல் கண் வைத்து அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.

ஆனால் துன்மார்க்கன் கையில் நீதிமானை ஒப்புக் கொடுக்க மாட்டார். இவையெல்லாம் நம் உள்ளமாகிய வீட்டில் நம் ஆத்துமாவுக்கு விரோதமாக எழும்புகிற பகை என்பதை நமக்கு தேவன் சுட்டிக்காட்டுகிறார்.

அதனால் தேவன் நம்மளில் இருக்கிற துன்மார்க்கரை சங்கரிப்பார்.

நீதிமொழிகள் 28:28

துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

நம் உள்ளத்தில் நீதியின் விளைச்சலை தேவன் வர்த்திக்க செய்கிறார். பின்பு நாம் சமுத்திரத்திலிருந்து கரையேறும் போது பூமியில் வருகிறோம். பூமியிலிருந்து பரிசுத்த பர்வதமாகிய உன்னதத்திற்கு போக வேண்டும். நாம் ஒப்புக் கொடுப்போம், தியானிப்போம், ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.      

-தொடர்ச்சி நாளை.