தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

யாக்கோபு: 1:22

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

 நம் பிறந்தநாள்-பிரதானநாள் இரட்சிக்கப்படும் நாள்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, நாம் முந்தின நாளில் தியானித்த வேதப் பகுதியானது கர்த்தர் எகிப்து தேசத்தின் நடுவே கடந்து போய் தலை பிள்ளைகளையும், எல்லாவற்றின் முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம் பண்ணி எகிப்து தேசத்தின்மேல் நீதியை செலுத்துவேன். நானே கர்த்தர் என்று சொல்லுகிறார். இவை எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால் நம் உள்ளமாகிய அவருடைய வீட்டில் எவையெல்லாம் முதற்பேறானவைகளாக நாம் வைத்திருக்கிறோமோ அவற்றையெல்லாம் அதம்பண்ணிணால் மாத்திரமே அவருடைய முதற்பேறானவாகிய  கிறிஸ்து நம் உள்ளத்தில் முதற்பேறானவராக செயல்பட முடியும் என்பதை அறிந்த தேவன் கடின இதயமாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி (நம் இருதயம்) அநேக அற்புதங்களை எகிப்தியர் நடுவிலும், பார்வோனின் நடுவிலும்,

இஸ்ரவேலர் நடுவிலும் செய்து அவருடைய வல்லமையை கண்டு தேவனுக்கு பயந்து அஞ்சி கீழ்ப்படிந்து முதற்பலனான கிறிஸ்து நமக்கும் முதற்பலனாயிருக்கும் படியாக அநேக காரியங்களை எகிப்தில் செய்தார். இன்று நம் நடுவில் உள்ளத்தில் செய்கிறார் என்பதை நாம் யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 மேலும் இந்த நாட்களில் அநேகர் நாட்களை நினைவு கூர்ந்து அவைகளை உலகத்தாரை போல கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவுக்குள் ஆத்துமாவில் மீட்கப்படுதல் எப்படி என்பதைப்பற்றி சில கருத்துகளை முந்தின நாளில் தியானித்தோம். கர்த்தருடைய பஸ்கா என்பது என்ன என்பதும் அந்த பஸ்கா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அவர் தான் தேவ ஆட்டுக்குட்டி. இந்த ஆட்டுக்குட்டி அடித்து இரத்தம் நம் உள்ளத்திலும் ஆத்மாவிலும் பூசுதல் தான் பஸ்கா பண்டிகை. இந்த பஸ்கா பண்டிகைத் தான் கர்த்தருடைய இராப்போஜனம். இந்த நாள் தான் நம்முடைய பிரதான நாள் என்று நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்கிறதை பார்க்கிறோம்.

அந்த நாள் தான் நினைவு கூருதலான நாளாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனால் அநேகர் வேறுவிதமாக மாம்ச சிந்தையோடு, நினைவு கூருகிறார்கள். மாம்ச சிந்தை மரணம்.  பிள்ளைகள் இப்பூமியில் பாவத்தில் பிறந்த நாளை நினைவு கூர்ந்து கொண்டாடுகிறார்கள். மேலும் பல வழிபாடுகளை செய்து வருகிறார்கள்.  அதனால் தேவ கோபம் தேசத்தில் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.  இதனை வாசிக்கிற தேவஜனமே நம் வாழ்க்கையில் மாற்றங்களை வருவித்துக் கொள்ளுங்கள்.

மேலும் இறந்த நாள் நினைவு கூருவது திருமண நாள் நினைவு கூருவது இவையெல்லாம் அந்நிய ஆராதனை செய்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். என்னவென்றால் பரிசுத்த வேத புஸ்தகத்தில் பிறந்தநாள் கொண்டாடினது ஏரோது ராஜாவும், பார்வோனும். ஆனால் இந்த நாட்களில் அநேக விசுவாசிகள் கர்த்தருடைய ஊழியக்காரர்கள் என்று சொல்கிற ஊழியக்காரர்கள் இந்த விதமான நாட்களை உலகத்தாரை போல கொண்டாடுகிறார்கள். இது மிகத் தவறான காரியம் நம்முடைய ஆத்மா மீட்பு தான் அருமையானது அதனை நினைவுகூர்ந்து தேவனை மகிமைப்படுத்துங்கள்.

சங்கீதம்: 97:12

நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

ஏரோதுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் யோவான் ஸ்நாபகனுடைய தலை துண்டிக்கப்படுகிறது. மேலும் பார்வோனுடைய பிறந்த நாளில் தான் சுயம்பாகிகளின் தலைவன் தூக்கிலி

டப்படுகிறான். இதனை வாசிக்கிற தேவனுடைய ஜனமே நாம் ஒவ்வொருவரும் உணர்வடைய வேண்டும். என்னவென்றால் நம் உள்ளத்தில் ஏரோது ஆட்சி செய்தால் நிச்சயம் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். ஏரோது இயேசுவை கொல்வதற்கு வகை தேடினவன் நீங்கள் ஏரோதுக்கு இடம் கொடுத்தால் கிறிஸ்து வளர முடியாது. மேலும்,

ஆதியாகமம்: 40:20-22

மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.

சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது.

சுயம்பாகிகளின் தலைவன் கண்ட தரிசனம் மூன்று கூடை. அதன் விளக்கம் மூன்று நாள். ஆனால் மூன்று நாளில் தலை உயர்த்தப்படுவதற்கு மாறாக தலைதூக்கி விடப்படுகிறது. ஆனால் பானபாத்திரக்காரனுடைய தலைவனின் தலை உயர்த்தப்படுகிறது. நாம் தேவனுடைய பானபாத்திரங்களில் பங்குள்ளவர்களாக இருந்தால் நம் வாழ்வில் நம் ஆத்துமாவின் உயிர்ப்பு காணப்படும் .

இதனை வாசிக்கும் அன்பானவர்களே நீங்கள் ஒன்று சிந்திக்கவேண்டும் யோபுவின் பிள்ளைகள் தன் தன் நாளிலே விருந்து கொண்டாடினார்கள், அதனால் தேவனுடைய கோபம் வானத்திலிருந்து இறங்கியது. அவன் பிள்ளைகள் எல்லோரும் அழிந்துபோனார்கள்.

யோபுடைய வாழ்க்கையில் தேவ கோபத்தினால் அவன் துக்கம் அதிகரித்தது ஆனால் அவன் தன் பிறந்தநாளை சபிக்கிறான்.

யோபு: 3:1-3

அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,

வசனித்துச் சொன்னது என்னவென்றால்:

நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக. மேலும்,

எரேமியா: 20:12-15

ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

பிரியமானவர்களே நாம் மாம்சத்தில் பிறந்தநாள் சபிக்க படுகிறதை பார்க்கிறோம். இதன் விளக்கம் அடுத்த நாளில் தியானிப்போம்.

ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                                               

-தொடர்ச்சிநாளை.