தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

எபேசியர்: 4:30

அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.

அல்லேலூயா.

பாரம்பரிய கொண்டாட்டங்கள் அழிக்கப்பட வேண்டும்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்ததான வேதப்பகுதியில் நாம் மாம்சத்தில் பிறந்த நாளை நினைவு கூரக் கூடாது என்பதையும் ஆவியில் பிறந்தநாள், இரட்சிக்கப்பட்ட நாள் பிறந்த நாள் என்றும் தேவன் நமக்கு தெளிவுபடுத்துகிறதை பார்க்கிறோம். ஆனால் அநேகர் மாசத்திற்குட்பட்டவர்களாய் கிறிஸ்துவின் பிள்ளைகள் நடக்கிறார்கள் அவர்கள் கிறிஸ்துவின் ஆவி இல்லாதவர்கள்.

ரோமர்: 8:6-9

மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.

மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

மேலும் தேவனுடைய வார்த்தை சொல்லுகிறது பரிசுத்தத்தின் நினைவு கூருதலை கொண்டாடுங்கள். ஆனால் நாம் எப்போதெல்லாம் நினைவு கூற வேண்டுமென்றால் நாம் உள்ளளவும் தேவனை நினைவு கூர்ந்து அவரை துதித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இதுதான் கொண்டாட்டம் ஆனால் இரட்சிக்கப்படாத மற்றவர்களை போல மனுஷரை பிரியப்படுத்தவும், பாரம்பரிய வழக்கம் நம்மிடத்தில் இருக்குமானால் நாம் சேற்றில் கிடக்கிறோம். அப்படிப்பட்டவர்களை குறித்து,

II பேதுரு: 2:20-22

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.

அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

பிரியமானவர்களே நம் ஆத்துமா எகிப்தின் (பாவத்தின் பாராம்பரியம்) அடிமையிலிருந்து தேவன் நம்மை நீங்கலாக்கி விடுவித்து இரட்சித்த பிறகு நாம் ஒவ்வொருவரும் மனுஷர்களுடைய பாரம்பரியமோ மற்றும் உலக ஆசை, வழிபாடு இப்படிப்பட்ட தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் இவைகளை செய்தால் மீண்டும் சேற்றில் விழுந்து விடுகிறோம். மேலும்,

கலாத்தியர்: 6:12-14

மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள்.

விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள்.

நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

நாம் சிலுவையை குறித்து மேன்மை பாராட்டுகிறோம் என்பது நம் உள்ளத்தில் இருந்த உலகம் சிலுவையிலறையுண்டதால் நாம் விடுதலை பெற்று இருக்கிறோம். அதனால் நாம் இரட்சிக்கப்பட்டோம்.

அதனால் நாம் மாம்சத்தின் கிரியை அழிக்கும் படியாகவே நம் தேவன் உள்ளத்தில் வாதைகளை அனுப்புகிறார்.

மேலும் அநேகர் கிறிஸ்துவை காரணம் காட்டி கிறிஸ்து பிறப்பு நாள், மரித்த நாள், உயிர்த்தெழுந்த நாள், வருஷத்தின் முதல் நாள் என்றெல்லாம் உள்ளத்தில் தீய கிரியைகளுக்கு இடம் கொடுக்கிறார்கள். இது நம்முடைய அக்கிரமத்தின் செயல்பாடாக கிறிஸ்து பிறப்பு நாள் எதுவும் வேதபுஸ்தகத்தில் எழுதப்படவில்லை. அதை போல் உயிர்தெழுந்த நாள், மரித்த நாள் எதுவும் வேத புஸ்தகத்தில் எழுதப்படாமல் இருந்தால் நாம் எப்படி ஒரு நாளை குறிக்க முடியும்? ஆனால் கிறிஸ்து பிறந்தார், வளர்ந்தார், மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று மட்டுமே எழுதப்பட்டிருக்க எப்படி ஒரு நாளை குறிக்க முடியும்.

இப்படி நாளை குறித்தவர்கள் மனுஷர்கள். மனுஷர்களின் கற்பனைகளின் பிரகாரம் நாம் நடந்தால் தேவனுக்கு தூரமாயிருக்கிறோம். வருஷத்தின் முதலாம் நாள் என்று விசேஷமாக கைக் கொள்கிறார்கள்.

வேதவசனம் சொல்கிறது கிறிஸ்து நம் உலகமாகிய உள்ளத்தில் வந்தது. இவ்வித பாரம்பரிய (பழைய) வாழ்க்கையை அழித்து எல்லாவற்றிற்கும் அவரே முதற்பேறானவராயிருக்கிறார். அதுபோல எல்லா நாளும், மாதமும்.  வருஷங்களும் கிறிஸ்து தான்.

நாம் எல்லா நாளிலும் தேவனை தொழுது கொண்டு தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்.

ஏசாயா: 43:11-13

நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே, தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

நாள் உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?

பிரியமானவர்களே தேவனுடைய வார்த்தையை நாம் தியானிக்கும் போது தேவ கற்பனைக்கு மாறாக நாம் உலக வழக்கங்களின் படி நடக்கக் கூடாது.உலகத்தார் கொண்டாடுவது போல் கொண்டாடக்கூடாது. எல்லா நாளிலும் நம் இரட்சிப்பையை நினைத்துக் களிகூர்ந்து மகிழ்ந்து தேவனை துதித்து அவருக்கு ஆராதனை செய்கிறவர்களாக காணப்பட வேண்டும். ஆனால் உலக பிரகாரம் பண்டிகை கொண்டாடுகிறார்களை அவர் தெற்றுகளால் முற்றிக்கை போடுகிறார். அதனால் நம்மை தெற்றுகளால் முற்றிக்கை போடாத படி நம்மை காத்துக்கொள்ள வேண்டும். ஜெபிப்போம்.

தேவன் யாவரையும் ஆசீர்வதிப்பார்.                  

-தொடர்ச்சி நாளை.