தேவன் நமக்கு மதில்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Aug 29, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 28:8

கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

தேவன் நமக்கு மதில்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் இஸ்ரவேல் சபை எகிப்திலிருந்து விடுதலையாகி யாத்திரை புறப்பட்ட போது கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தை மீண்டும் கடினப்படுத்துகிறார்.     அதனால் பார்வோனும்,சேனையும் இஸ்ரவேல் சபையை பின் தொடருகிறது.     அவர்கள் பின்தொடர்ந்ததை கண்ட இஸ்ரவேலர் பயப்படுகிறதை பார்க்கிறோம்.    அப்பொழுது தேவனுடைய கிரியைகளுக்கு மாறாக இஸ்ரவேலர் முறுமுறுக்கிறார்கள்.     அப்பொழுது மோசே நீங்கள் பயப்படாதிருங்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார் நீங்கள் சும்மாயிருப்பீர்களாக என்றான்.     தேவன் அவருடைய மகிமையை விளங்கப்பண்ணும் படியாக சில காரியங்களை செய்கிறதை பார்க்கிறோம்.     ஆனால் நாம் அதனை நம் வாழ்க்கையிலும், இவ்விதமான காரியங்கள் நடக்கும் போது சோர்ந்து போகாதபடி தேவனுக்கு மாறாக எந்த செயல்களும் செய்யாதபடி நாம் பெற்ற இரட்சிப்பை புதுப்பித்துக் கொள்வது மிக ஆசீர்வாதமாக இருக்கும். 

ஏனெனில் ஒரு தரம் பிராகசிப்பிக்கபடும் பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியை பெற்றும், தேவனுடைய நல் வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்திகிறபடியால் மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்.

ஆதலால் நாம் பெற்ற விடுதலையை எப்போதும் ஜாக்கிரதையோடு காத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இஸ்ரவேலர் யாத்திரையில் பார்வோனும், சேனையும் பின் தொடர்ந்ததை கண்ட மோசே தேவனிடத்தில் முறையிடுகிறான்.    ஆனால், தேவன் சொல்கிறார்; மோசேயிடம் நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லு.

யாத்திராகமம்: 14:16-18

நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.

எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.

இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.

அன்பானவர்களே தேவன் நமக்கு இந்த காரியங்களை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.     என்னவென்றால் பார்வோன், கடின இருதயம், அது மாம்சம்; நம் முந்தின பாவ வாழ்க்கை, மாம்ச சிந்தைகள் என்னவென்றால் இருதயத்தின் நுனித்தோல் மாற்றபடாமல் இருப்பதால் (விருத்தசேதனம் இல்லாமல்) நம் இருதயத்திற்குள் தேவவசனம் செல்வதற்கு இடமில்லை.     இவை தான் எகிப்து (பார்வோன்) ஆனால் நம் தேவனாகிய கர்த்தர் வாழ்க்கையிலிருந்து கடுஞ் சோதனையில் கூட நம் இருதயத்தை உடைத்து உள்ளத்தில் தேவ அன்பை கட்டளையிட்டு அதனுள் தேவ வசனம் நுழைய செய்கிறார் (வெளிச்சம்).  அவர் தான் கிறிஸ்து அப்பொழுது நம் கையில் கோலாக இருந்து (வசனமாகிய கிறிஸ்து) தேவனோடு ஐக்கியப்படுகிறது.

அவ்விதம் ஐக்கியப்பட்டாலும் அனுதினம் நம் யாத்திரை கானானை (சொந்த தேசமாகிய பரலோகம்) நோக்கி நாம் செல்லும்  போது நம் பராம்பரிய பழைய வாழ்க்கைகள் நம்மை தொடர்ந்து வருகிறது.     என்றால் அவை தான் பார்வோனும், அவனுடைய சேனையும் பின்தொடருகிறது.     நாம் எங்கு சோர்ந்து போகிறோமோ நம் அக்கிரமமாகிய பாரம்பரிய வாழ்க்கை நம் உள்ளத்தில் வந்து விடும். அது தான் தேவன் சொல்கிறார் நீங்கள் யாத்திரை புறப்படுங்கள் மோசேயிடத்தில் சொல்கிறார்.     நீ உன் கையில் இருக்கிற கோலை ஓங்கி, சமுத்திரத்தின் மேல் நீட்டி சமுத்திரத்தை பிளந்து  விடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையில் நடந்து போவார்கள்.

சிவந்த சமுத்திரம் என்பது தேவன் காட்டுகிற திருஷ்டாந்தம்.    என்னவென்றால் துன்மார்க்க பாவ இச்சையான பாரம்பரிய காரியங்கள் இவைகள் நம் உள்ளத்தில் வரும்போது தேவ வசனம் தான் (கோல்) கிறிஸ்து இந்த தடையை நீக்க வேண்டும்.     அப்போது அதில் ஒரு துளி நீர் (ஒரு நினைவு) போலும் இல்லாமல் நாம் விசுவாசத்தோடு ஓடமுடியும்.    இவ்விதமாக நம் தேசத்திலோ, நம் சபையிலோ, நம் குடும்பங்களிலோ, நம் தனிப்பட்ட வாழ்விலும் தேவன் மகிமைபடுவார்.

இவ்விதமாக தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறவர்கள் நடுவில் தேவன் மகிமைப்படுகிறார். 

இந்த மாற்றம் உள்ளத்தில் உருவாகுமானல் தேவன் நம் சத்துருக்களாகிய பழைய பாவ பாரம்பரிய எகிப்தின் கிரியைகள் நம்மைப் பின் தொடராதபடி தேவன் நமக்கு பின்னாக நடக்கிறார். இதைத் தான் எகிப்தியர் இஸ்ரவேலரை பின் தொடரும் போது,

யாத்திராகமம்: 14:19-21

அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.

இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

என்னவெனில் எகிப்தியர் தெய்வம் அல்ல; மனுஷர்கள்.     அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல; மாம்சம் தான்.     இதை  தான்,

ஏசாயா: 31:3

எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

எகிப்தியர்கள் என்றால் நம் பழைய மனுஷ (பழைய வாழ்க்கை) அது ஆவிகேற்ற பிரகாரம் சிந்திக்காமல் மாம்சத்துக்குரியவைகளை சிந்திக்கும், செயல்படுத்தும் அதனால் கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார்.     அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி சகாயம் பெறுகிறவனும் விழுந்து அனைவரும் ஏகமாய் அழிந்து போவார்கள்.     இவற்றை தான் தேவன் சிவந்த சமுத்திரத்தில் செய்து நமக்கு காட்டுகிறார்.

பிரியமானவர்களே நாம் ஆவியில் வளர வேண்டும் என்று கிறிஸ்து நம்மை நடத்திச் செல்லும் போது பழைய வாழ்க்கை (பார்வோன் எகிப்து) பின்னாக வந்து துரத்துகிறது.     நாம் இடறுவதற்கேதுவாக இருக்கிறது.     அப்போது தேவன் நம் நடுவில் வந்து ஆவியும், மாம்சமும் தொடாத படி தடுத்து விடுகிறார்.     ஆனால் அவர் வரும்போது இஸ்ரவேலராகிய கீழ்படிக்கிறவர்களுக்கு அவர் வெளிச்சமாகவும்,

கீழ்ப்படியாதவர்களாகிய எகிப்தியருக்கு மேகமும், அந்தகாரமுமாய் இருப்பார்.     இந்த இரண்டு கிரியைகள் நம்மளில் வரும் போது தேவனுடைய (கோல்) வசனம் கிரியை செய்யுமானால் தேவனுடைய காற்று வீசும் படி செய்து நம் உள்ளத்தில் இருந்த பாவ இச்சைகளை மாற்றி விட்டு அவர் நமக்கு மதிலாக காணப்படுகிறார்.

இவ்விதமாக நம் விசுவாச யாத்திரையில் நம்முடைய தேவன் நமக்கு சுற்றிலும் மதிலாக காணப்படுவார்.     நம் எதிரியாகிய சத்துருவானவன் நம்மை தொடாதபடி பாதுகாக்கிறார்.     அதற்கு நம்மை தாழ்த்தி ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.                                                                             

-தொடர்ச்சி நாளை.