Oct 22, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

சங்கீதம்: 119:165 

உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.     அல்லேலூயா.

சமாதான பாதையில் நடத்துகிற நீதியின் பாதை:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நாம் எவ்விதத்தில் இரட்சிப்பின் வல்லமையை பெற்று கொள்ள வேண்டும் என்பதை குறித்து தியானித்தோம். இரட்சிப்பின் வல்லமையான அபிஷேகம் நமக்கு எவ்வித ஆசீர்வாதங்களை தருகிறது என்பதையும் நாம் தியானித்தோம்.     உலக விதமான அழிந்து போகிற ஆசீர்வாதங்களை காட்டிலும் அழியாத ஆசீர்வாதமாகிய நித்திய மகிமையான அலங்காரமாகிய பொற் கிரீடம் மகிமையான கிறிஸ்துவுக்கு நமக்குள் சூட்டப்படுகிறதை நாம் தியானித்தோம்.       நமக்காக முட்கிரீடம் சூட்டப்பட்ட கிறிஸ்துவுக்கு நம் இரட்சிப்பின் வல்லமையை சுதந்தரிக்கும் போது பொற் கீரீடம் சூட்டப்படுகிறது.       இவ்விதமான வாழ்க்கையை கிறிஸ்து மூலம் நாம் பரிசுத்தத்திலும், கீழ்ப்படிதலிலும், பயபக்தியிலும், பொறுமையோடிருந்து பெற்று கொள்ள வேண்டும்.

யாக்கோபு: 1:1-4

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது:

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

யாக்கோபு: 1:12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

வெளிப்படுத்தல்: 2:10

நீ படப்போகிற பாடுகளைக் குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும் பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால் ஜீவ கிரீடம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் பல சோதனைகள் நமக்கு நேரிடும். அதற்கு மாதிரி தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் சகித்து உயிர்ப்பிக்கப்படுகிறார்.     அது போல பாடுகள் வந்தால் பயப்பட்டு சோர்ந்து போகாத படி பாடுகளை பொறுமையோடு சகித்து பரிசுத்தத்தை காத்து கொண்டு ஜீவகிரீடத்தை பெற்று கொள்ள வேண்டும்.

ஏசாயா: 62:2,3

ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

பிரியமானவர்களே முந்தின வசனத்தை நாம் தியானிக்கும் போது நமக்குள்ளாக கிறிஸ்து எவ்விதம் பிரகாசித்து எல்லா ஜாதிகளும் கிறிஸ்துவின் மகிமையை நமக்குள் எப்போது காண்பார்கள் என்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.       நாம் நடக்கிற நீதியின் நடக்கையால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குள் மகிமைப்படுவார்.      அப்போது கர்த்தரின் கையில் அலங்காரமான கிரீடமும், தேவனுடைய கரத்தில் ராஜ முடியுமாய் இருப்பாய் என எழுதப்பட்டிருக்கிறது.

பின்பு அனுதினம் நாம் தேவ சமூகத்தில் நம்மை முழுமையும் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதனை தேவன் ஆரோனையும் அவன் குமாரரையும் காட்டி நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி வருகிற வசனங்களை நாம் கழிந்த நாளில் தியானித்தோம்.      ஆரோனும் அவன் குமாரரும் எவ்விதம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தபடுகிறார்கள் என்றும் தேவன் நமக்கு கிறிஸ்து மூலம் தந்த புதிய கற்பனைகளாகிய கிறிஸ்துவின் உபதேசம் இரட்சிப்பின் வல்லமையான அபிஷேகத்தை நமக்கு தந்து தேவன் நம்மை ஆசீர்வதிக்கிற அந்த ஆசீர்வாதம் நித்திய ஆசீர்வாதங்களாக நம் வாழ்க்கையில் வளர அவை எல்லாவற்றையும் நாம் அனுதினம் கைக்கொள்ள வேண்டும்.

யாத்திராகமம்: 29:24,25

அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி,

பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.

பிரியமானவர்களே நாம் தேவனிடத்தில் பெற்று கொண்ட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுதினம் நாம் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்ட வேண்டும்.    கையில் தந்த ஆசீர்வாதம் நம் உள்ளங்கைகளில் இருக்க வேண்டும். ஏனென்றால் வெறுங் கையோடே தேவ சந்திதானத்தில் போகக்கூடாது.

பின்பு நாம் பெற்றுக்கொண்ட அத்தனையும் தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பு பயபக்தியோடு தகிக்க வேண்டும்.

நாம் தேவனிடத்தில் முழுமையும் ஒப்புக்கொடுத்து தேவனுக்காக நம்மைப் பிரதிஷ்டிக்க வேண்டும்.  அப்படி பிரதிஷ்டிக்கும் போது நாம் ஆவி, ஆத்மா, சரீரம் முழுமையும் தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும்.

யாத்திராகமம்: 29:27,28

மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.

அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும்.

நாம் நம்மை தேவனிடத்தில் பிரதிஷ்டிக்கும்  போது நம் முழு இருதயம் அந்த இருதயத்திலே முக்கியமாக வைத்திருக்கிற காரியத்தை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த படுத்த வேண்டும்.

I பேதுரு: 3:15

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.

இவை தான் நாம் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதான பலிகளில் இவைகளே ஏறெடுத்துப்  படைக்கும் படைப்பாயிருக்கும்.       இவ்விதம் நடந்து கொண்டால் நம் ஆத்துமா சமாதானத்துக்குள் இருக்கும் நாம் பேசும் போது நம்மளில் இருக்கிற கர்த்தர் மற்றவர்களுக்கும் சமாதானம் தந்தருள்வார்.     இவ்விதம் யாவரும்  ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.    கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.       

-தொடர்ச்சி நாளை.