Oct 23, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

எபிரெயர்: 12:28

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக் கொள்ளக் கடவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலுயா.

தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்வது எப்படி?

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நீதியின் பாதையில் நடப்போமானால் நமக்கு சமாதான பாதை கிடைக்கும் என்பதை தியானித்தோம்.      நீதியின் பலன் ஜீவ விருட்சம். அந்த விருட்சம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   அவர் நம்மை  நீதியின் பாதையில் நடத்துவார்.

நீதிமொழிகள்: 12:28

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

இவ்வித சமாதான பாதை நமக்கு கிடைக்க நாம் கர்த்தருக்காய் பிரதீஷ்டைப் பண்ணப்பட வேண்டும்.       அதற்காக தான் ஆரோனும், அவன் குமாரரும் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி  பிரதிஷ்டை பண்ணப் படுகிறார்கள்.      பின்பு நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக நமக்குள்ளில் பிரதீஷ்டிக்கப்படுத்தபடுகிறார்.      இவ்வித ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கை நமக்கு கிடைக்க நாம் யாவரும் முன் வர வேண்டும்.

யாத்திராகமம்: 29:30

அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள் மட்டும் உடுத்திக் கொள்ளக்கடவன்.

பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்து அதின் மாம்சத்தை  பரிசுத்த இடத்திலே சேவிப்பாயாக.  அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே  புசிக்க கடவீர்கள்.

அவர்களை பிரதீஷ்டைப் பண்ணி பரிசுத்தப்படுத்தும் பொருட்டு அவைகளால் பாவநிவர்த்தி செய்யப்பட்ட படியால் அவைகளை அவர்கள் புசிக்க கடவர்கள்.      அந்நியனோ அவைகளை புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள்.

பிரியமானவர்களே நாம் கர்த்தருடைய சந்நிதியில் பிரதிஷ்டிக்கபட்டு விட்டால் என்றென்றும்\அமரிக்கையோடும், சமாதானமாகவும் வாழ வேண்டுமானால் தேவன் நமக்கு தரித்திருக்கிற வஸ்திரம் அனுதினம் பாதுகாக்க வேண்டும்.      நாம் சாத்தான் வலையில் சிக்காதபடி நம்மை காத்து கொள்ள வேண்டும்.      நம் ஆத்துமா கிறிஸ்துவின் ஜீவனோடு இணைத்து கிறிஸ்துவின் ஜீவன் நமக்குள் வாழ்வதும்,  நம் ஆத்துமா தான் ஆட்டுக்கடாவாக இருக்கிறது.

அந்த ஆட்டு கடாவை நாம் பரிசுத்த ஸ்தலத்தின் (கிறிஸ்துவின் சபை) வேவிக்க வேண்டும்.     வேண்டும் வேவிப்பது என்பது கிறிஸ்துவுக்காக பக்குவப்படுத்தி ஒருக்கி எடுக்க வேண்டும்.     பின்பு தேவனுடைய வசன பிரகாரம் நம்மை நாம் பரிசுத்தபடுத்துவோமானால் நம் ஆத்துமாவின் பலனை நாம் புசிக்க முடியும்.      ஆத்மாவின் பலன் சமாதானமும் சந்தோசமுமாகும்.

அவ்விதம் உருவாக்கப்பட்ட ஆத்துமாவை மீண்டும் பாவநிவிர்த்தி செய்து பிரதிஷ்டித்து ஒவ்வொரு காரியத்திலும் நாம் செயல்பட வேண்டும்.

யாத்திராகமம்: 29:34

பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம் மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது.

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனம் திருஷ்டாந்தப்படுத்தபட்ட காரியம் என்னவென்றால் கிறிஸ்துவின் மாம்சம் நமக்காக பிரதீஷ்டிக்கபட்டு, அடிக்கப்பட்டு அந்த மாமிசம் நாம் புசிக்க வேண்டும்.     ஆனால் மாம்சத்திலும், அப்பத்திலும் மீதியாக விடியற்கால மட்டும் வைக்கக் கூடாது என்பதை தேவன் நமக்கு விளக்கிக் காட்டுகிறார்.

இந்த வசனம் நாம் தியானிக்கும் போது கிறிஸ்துவின் மாம்சம் புசித்தால் இரவில் தான் புசிக்க வேண்டும்.      அந்நியன் என்றால் தாங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகளை முழுமையாக ஒப்புக் கொடுத்து பிரதீஷ்டிக்கப்படாதவர்.      இவ்விதம் அந்நியன் அதை புசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருக்கிறது.

யாத்திராகமம்: 29:35-37

இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழு நாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,

பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவ நிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பிலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய்.

ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச் சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.

நம் இதயமாகிய பலிபீடம் கிறிஸ்துவாக செயல்படுவதற்கு மேற்கூறிய தேவனுடைய வார்த்தைகள் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது.     நாம் ஆத்துமாவின் பலனை பசித்த பிறகு ஏழு நாளளவும் நம்மை மீண்டும் பிரதீஷ்டை பண்ண வேண்டும்.       பின் ஒவ்வொரு நாளிலும் நாம் தேவனுக்கு ஸ்தோத்திர பலி செலுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.      நாம் அனு தினமும் பாவ நிவர்த்திக்காக சுத்திகரிக்க வேண்டும்.     அவ்விதம் சுத்தம் செய்யும் போது நம் இருதயமாகிய  பலிபீடம் (கிறிஸ்து) தேவனுடைய அபிஷேகத்தால் பரிசுத்தபடுகிறது.

அவ்விதம் ஏழுநாள் பலிபீடத்திற்காக பிராயசித்தம் செய்து அதை பரிசுத்தபடுத்த வேண்டும்.      பலிபீடத்துக்காக பிராய சித்தம் செய்வதென்றால் நாம் எந்த துர் கிரியைகளிலும் நுழையாத படி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.      அவ்விதம் நாம் வாழ்வோமானால் அந்த பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்.

பலிபீடமானது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.      அவ்விதம் நம் வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதை தேவன் நமக்கு திருஷ்டாந்தப் படுத்துகிறார்.

பின்பு அனுதினம் நாம் இடைவிடாமல் நம் இருதயத்தில் தேவனுக்கு பலி செலுத்தி பலிபீடத்தில் ஆராதனை செய்ய வேண்டும்.      அப்போது அது தேவனுக்கு பிரியமான ஆராதனையாக இருக்கும்.     யாவரும் ஒப்புக் கொடுப்போம்.     ஜெபிப்போம்.       கர்த்தர் யாவரையும்ஆசீர்வதிப்பார்.                    -தொடர்ச்சி நாளை.