Oct 24, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

II கொரிந்தியர்: 7:1

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்குஉண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலூயா.

நாம் அவருடைய ஜனம், அவர் நம்முடைய தேவன்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் எப்படி தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் என்பதை குறித்து தியானித்தோம்.      எப்படியெனில் நாம் ஆராதிக்கிற ஸ்தலம் மகா பரிசுத்தமாக இருக்க வேண்டும் கழிந்த நாளில் நாம் தியானித்த அத்தனை கட்டளைகள் பிரகாரம் பரிசுத்தப்படுத்துகிற சபைகளாக இருக்க வேண்டும்.     அவை எப்படியென்றால் நம்மை பரிசுத்த படுத்துகிற பரிசுத்த ஸ்தலமாக கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டு, அந்த பலியினால் நம்மை சுத்திகரித்துக் ஒழுங்காக நம்முடைய பாவங்களுக்காக நாம் பிராயச்சித்தம் செய்து நம்மை பரிசுத்தப்படுத்தி தேவனுடைய வஸ்திரத்தை அணிந்து கொண்டு வஸ்திரம் அழுக்காகாத படி காத்துக் கொண்டு எல்லா நாளிலும் நம்மை சுத்திகரித்து பின்பு கிறிஸ்துவின் மாம்சத்துக்காக அப்பமும் புசித்து தேவனுக்கு ஆராதனை செய்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி நாம் தேவனுக்கு ஆராதனை (பலி) செய்வோமானால் நாம் பரிசுத்தமாக வாழ முடியும்.      நம் இருதயமாகிய பலிபீடம் எப்போதும்  ஆராதனை ஸ்தலமாக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்.

யாத்திராகமம்: 29:39-41

ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக.

ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் காற்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக.

மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய்.

எப்படியெனில் காலையிலும் மாலையிலும் எப்போதும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்னவெனில் பழைய ஏற்பாட்டில் ஆட்டுக் குட்டியை பலியிட்டார்கள்.     மேலும் இடித்து பிழிந்த காற்படி எண்ணெய் என்றும் மெல்லிய மாவு மற்றும் திராட்ச ரசம் என்பதும் எல்லாமே கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தபடுத்தியது.

ஏனென்றால் நமக்காக கிறிஸ்து பலியிடப்பட்டார்.     எப்படியென்றால் இடித்து பிழிந்த எண்ணெய் என்பது நம் ஆத்துமாவை உடைத்து உருவாக்கி அதிலிருந்து வார்க்கப்படுகிற எண்ணெய் மேலும் தேவனுடைய உபதேசம் மெல்லிய மாவு அவற்றிலிருந்து புறப்படுகிற திராட்ச ரசம் கிருபை இவ்விதமாக நம் உள்ளத்தின் அனுபவத்தால் தேவனுக்கு சுகந்த வாசனையான தகன பலியாக நம்மை தேவனுக்கு கொடுத்து ஆராதிக்க வேண்டும்.

யாத்திராகமம்: 29:42-46

உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்பட வேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே.

அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்.

ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன்.

தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.                                                                                                               

பிரியமானவர்களே கர்த்தர் மோசேயை வைத்து இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்த பிறகு வாசஸ்தலம் அமைக்கச் சொல்லி,  மலையில் அவர் காட்டின பிரகாரம் வாசஸ்தலம் அமைக்கவும், அதனுள் ஆசரிப்பு கூடாரம் போடவும் செய்து ஆரோனையும் அவன் குமாரரையுங் ஆசாரியர்களாக்கி எவ்வித பரிசுத்தம் ஆசாரியர்கள் இருக்க வேண்டுமென்றும் என்னென்ன வஸ்திரம் வேண்டுமென்றும் வஸ்திரங்கள் பரிசுத்தமாக காக்கப்படுவது குறித்தும் எத்தனை நாட்கள் வஸ்திரங்கள் உடுத்த வேண்டும் என்றும், எப்படி தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டுமென்றும், பலிபீடம் எப்படி அமைக்க வேண்டுமென்றும், பலிபீடம் எவ்விதமான பரிசுத்தம் இருக்க வேண்டும் என்பதையும் பலிபீடத்தில் எப்பொழுதெல்லாம் பலி சொலுத்த வேண்டும் என்றும், அந்த பலி (ஆராதனை) என்ன பலியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை குறித்தும் தேவன் நமக்கு போதித்து நடத்தி காட்டி நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது உண்மையான சத்திய ஆராதனை, சாட்சியின் ஆராதனை நம் உள்ளத்தில்,  இவைகளெல்லாம் சம்பவிக்கும் என்பதை தேவன் நமக்கு விளக்கிக் காட்டியிருக்கிறார்.

ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தருடைய உண்மையான ஓர் வாசஸ்தலம் (பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டி) சபையாக வெளிப்பட இந்த எல்லாக் கருத்துகளின் பிரகாரம் நாம் நம்மை ஒப்புக் கொடுப்போமானால் கர்த்தர் நம்மளில் வாசம் பண்ணி நமக்கு தேவனாயிருப்பார் நாம் அவருடைய ஜனமாயிருப்போம்.       அவர் தங்கியிருக்கிற ஸ்தலமாகிய உள்ளம் பரிசுத்தமாயிருக்கும்.

அப்போது பிரியமானவர்களே நம்மை தேவன் பாவ பாரம்பரிய பழக்க வழக்கத்திலிருந்து எதற்காக அழைத்து எடுத்துக்கொண்டு வந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.      அவர் தான் உண்மையான தேவன் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

II கொரிந்தியர்: 6:17,18

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.                   இவ்விதமாக நாம் தேவனுக்கு உண்மையாக இருப்போம்.     ஜெபிப்போம்.     ஒப்புக் கொடுப்போம்.     கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.         

-தொடர்ச்சி நாளை.