தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

உன்னதப்பாட்டு: 2:8

இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள் மேல் குதித்தும் மேடுகள் மேல் துள்ளியும் வருகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.      அல்லேலுயா.

மணவாளனாகிய கிறிஸ்துவின் அபிஷேகம்:- திருஷ்டாந்தத்தோடு விளக்கம்:

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டியின் அபிஷேகம் எவ்விதம் நம் உள்ளத்தில் வெளிப்படுகிறது என்பதை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.     அபிஷேகம் எவ்வித வாசனை பொருந்தியதாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம். பழைய ஏற்பாட்டின் பகுதியில் கையால் உண்டாக்கப்படுகிறது.      ஆனால் எல்லா ஜனங்கள் மேலும் அது ஊற்றப்படவில்லை.       ஆனால் கிறிஸ்து நம்மளில் பிரவேசித்தால் அவர் எவ்விதம் அபிஷேகம் பண்ணப்படுகிறாரென்றும், அவரிடத்தில் இருந்து தோன்றிய பரிசுத்த ஆவியானவர் எவ்வித அபிஷேகம் உள்ளவராக வெளிப்படுகிறாரென்றும் நாம் தியானிக்கிறோம்.

யாத்திராகமம்: 30:32,33

இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறோரு தைலத்தைச் செய்யவுங் கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகக்கடவன் என்று சொல் என்றார்.

பிரியமானவர்களே கர்த்தர் சொல்லுவது தேவன் சொல்கிற அபிஷேகம் அல்லாமல் வேறொரு அபிஷேக தைலம் நம் ஜீவிதத்தில் வரலாகாது என்பதை வசனம் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

யாத்திராகமம்: 30:34,36

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப் போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,

தைலக்காரன் செய்கிறது போல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி,

அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது.

மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது நம்முடைய தேவனாகிய கர்த்தர்,  கர்த்தராகிய கிறிஸ்துவை எவ்விதத்தில் அபிஷேகிக்கிறார் என்பதை திருஷ்டாந்தபடுத்துகிறார்.

சங்கீதம்: 20:6

கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.

இந்த வசனம் நம்முடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஒரே பேறான குமாரனை அபிஷேகம் பண்ணி (மகிமையை) நமக்குள் அனுப்புகிறார்.     அப்போது கிறிஸ்து நமக்காக நமக்குள்ளில் இருந்து பிதாவினிடத்தில் ஜெபிக்கிறவராக காணப்படுகிறார்.

யோவான்: 17:14,15

நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.                                                            நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

மேலும் நாம் ஒவ்வொருவரும் பரிசுத்த வானமாக மாறுவோமானால் கிறிஸ்து நமக்காக ஜெபிக்கிறவராக காணப்படுகிறார்.     அந்த ஜெபம் பிதாவாகிய தேவன் கேட்கிறார்.     ஏனென்றால் பிதாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.     அவர் தான் வசனம் அந்த வசனம் சத்தியம்.அந்த சத்தியம் நம் ஒவ்வொருவருடைய ஆத்துமாவின் தீமையிலிருந்து விடுதலையாக்கும்.

கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம் தான் வெள்ளைபோளமும், குங்குலியமும், பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும், சுத்தமான சாம்பிராணி இவை சம நிறைவாக எடுத்து பரிமேளமேற்றி துப்புரவான தூப வர்க்கமாக்குவது அது என்னவென்றால் பிதாவுக்கு கீழ்ப்படிதல், தாழ்மை, அன்பு, மகிமை செலுத்துவது, கட்டளையாகிய சகல கற்பனைகளையும் மீறாமல் செய்வதும், நியாயப்பிரமாணம் கைக்கொள்வதும் இவையெல்லாம் ஒன்று போல் நாமும் கடைப்பிடிக்கும் படியாக தேவன் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார். அப்படியானால் நீதியும், நியாயமும், கிருபையும், உருக்க இரக்கமாய் அவர் வெளிப்படுகிறார்.       அப்போது பிதாவின் மகிமையினால் கிறிஸ்து மகிமைபட்டு அந்த மகிமையை நமக்கும் தருகிறார்.      அப்போது நமக்காக கிறிஸ்து வேண்டுதல் செய்கிறவராக காணப்படுகிறார்.      அதைத்தான்,

உன்னதப்பாட்டு: 3:6

வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப் போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?

பிரியமானவர்களே கிறிஸ்து மணவாளனாக வாசனை திரவியங்களோடு வனாந்தரமாகிய நம் உள்ளத்திலிருந்து மேற்கூறப்பட்ட கிருபைகளில் அத்தனையும் பெற்று கொண்டவராக எழும்புகிறார்.      தேவனுடைய வார்த்தைகள் அத்தனைக்கும் கீழ்படிகிறவர் கிறிஸ்து.      அவர் வாசனை எவ்வித தூபஸ்தம்பமாக எழும்பும் என்பதை நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டும்.

தேவன் மோசேயிடம் இவ்வித பரிசுத்த தூபவர்க்கமாக்கி ஆசாரிப்பு கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக;அது உங்களுக்கும் மகா பரிசுத்தமாகயிருக்க கடவது.

இவை சாட்சி சந்நிதியில் வைக்கச் சொன்னது, அந்த சாட்சி சந்ததி கிறிஸ்து என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.      அது ஜனங்கள் செய்யலாகாது அது கர்த்தருக்கென்று உனக்கு பரிசுத்தமாயிருப்பதாக.

இவ்வித அபிஷேக தைலம் உண்டு பண்ணுதல் மணவாளன்  மணவாட்டி மனுஷனின் ஆத்துமாவின் கிரியைகளில் வெளிப்படும் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.     இவை எதற்காக என்றால் தேவன் நம்முடைய வேலையை செய்யும் படியாக நம் ஆத்மாவிற்கு ஒரு விடுதலை (உலக, மோக இச்சைகளிலிருந்து) தந்து தன் குமாரன் மணவாளனாகவும் அவரில் இருந்து வெளிப்படுகிற பரிசுத்த ஆவியானவர் மணவாட்டியாகவும் நம் ஆத்துமாவையும் அதோடு இணைத்து மணவாட்டி சபையாக்கி தம்முடைய மகிமையில் வெளிப்பட்டு தம்முடைய வேலையை இந்த உலகத்தில் செய்யும் படியாகவே அபிஷேகிக்கிறார்.    ஆனால் அந்த அபிஷேகம் சொந்த அலுவல்களுக்கு அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் தேவன் சொல்கிறார் இந்த தூபவர்க்கத்தை நீ செய்ய வேண்டிய முறைமையின் படி உங்களுக்காக செய்து கொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்கு பரிசுத்தமாயிருப்பதாக.

அதனால் பரிசுத்த அபிஷேகம் பெற்று  நாம் கர்த்தருக்காக வாழ யாவரும் முன்வர ஒப்புக் கொடுப்போம்.      ஜெபிப்போம்.      கர்த்தர் யாவரையும் ஆசிர்வதிப்பார்.               

 -தொடர்ச்சி நாளை.