Oct 30, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

எபிரெயர்: 9:14

நித்திய ஆவியினாலே தம்மைத் தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலூயா.

தேவனுடைய வேலையின் அழைப்பு:-திருஷ்டாந்தம்: 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் மணவாளனாகிய கிறிஸ்துவின் அபிஷேகம் நம்மிடத்தில் வருகிறதை குறித்து திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.   அந்த அபிஷேகம் நாம் ஒவ்வொருவரும் ஆத்மாவில் பெற்றுக்கொண்டு, நம்முடைய சொந்த அலுவல்களுக்கு அல்ல நம்முடைய பிதாவாகிய தேவன் தம்முடைய வேலையை தன் குமாரனாகிய கிறிஸ்து மூலம் செய்து எடுப்பதற்காக தன்னுடைய ஜனமில்லாதிருந்தவர்களை தன்னுடைய ஜனமாக்கி கொண்டு ஆத்மாவில் அபிஷேகம் கட்டளையிட்டு பின்பு,

ஓசியா: 1:10

என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங் கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

அநேகரை அவர் தம்முடைய பிள்ளைகள் ஆக்கும் படியாகவே தேவன் கிரியையை நடப்பிக்கிறார்.

ரோமர் 8:17       நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.    அதற்கு திருஷ்டாந்தமாக தேவன்,

யாத்திராகமம்: 31:1-5

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும்,

இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும்,

மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்.

தேவன் தம்முடைய வேலையாகிய ஆசாரிப்பு கூடாரம் நாம் ஒவ்வொருவரிலும் நடைபெறும் படியாக முன் திருஷ்டாந்தபடுத்தியும் பின்பு கிறிஸ்துவின் அபிஷேகம் என்ன என்பதை குறித்து விளக்கி காட்டும் படியாக பெசலெயேலை பெயர் சொல்லி அழைத்து, விநோத  வேலையும் யூகித்து செய்வதற்கும் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், வேலை செய்கிறதற்கும் என்றால் வசனத்தாலும், கிருபையினாலும்,

சத்தியத்தினாலும் நிரப்பப்பட்ட மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கும் படியாக பெசலெயேலை தேவ ஆவியினால் நிரப்பி திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.                            தேவ ஆவியில் ஞானமும், புத்தியும் அறிவும் இருக்கிறது என்பது நமக்கு நன்றாக விளங்குகிறது.    ஞானமாகிய கிறிஸ்து புத்தியாகிய மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவர் என்கிற செயல்பாடுகள் நம்மில் இருந்தால் நாம் தேவனை அறிகிற அறிவை கண்டடைவோம். எப்படியென்றால்,

யோவான்: 3:29,30

மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.

அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.

பிரியமானவர்களே நாம் மணவாளனுடைய சத்தம் கேட்டு அனுதினம் நம்மை சிறுமைப்படுத்தி தாழ்த்தி ஒப்பு கொடுக்க வேண்டும்.

மணவாளனகிய கிறிஸ்துவின் சத்தம் ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் தருகிறது.

நீதிமொழிகள்: 2:6

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.

நீதிமொழிகள்: 2:7

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

நீதிமொழிகள்: 2:10,11

ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,

நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.                   கர்த்தர் பெசலெயேலை பெயர் சொல்லி அழைத்து தேவ ஆவியினால் நிரப்புகிறது ஞானம், புத்தி, அறிவும் பெற்றுக் கொண்டு ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைகளை செய்யும் படிக்கு அழைக்கிறதை பார்க்கிறோம்.   இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுவது நாம் தேவ ஆவியினால் நிரப்பப்பட்டால் ஞானமாகிய கிறிஸ்து மணவாளனாகவும்,புத்தி பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியாகவும், அறிவு நாம் தேவனை பற்றிய அறிகிற அறிவாக அபிஷேகம் நம்மளில் விளங்குகிறதை நாம் பார்க்கிறோம்.

யாத்திராகமம்: 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

கர்த்தர் தாண் கோத்திரத்து அகோலியாமை துணையாக பெசலெயேலோடே கூட்டுகிறார்.   ஏனென்றால் தாண் கோத்திரம் யாக்கோபின் மனைவியாகிய ராகேலின் வேலைகாரியாகிய பில்காள் பெற்றெடுத்த கோத்திரம் தாண்.

தேவன் பெயர் சொல்லி அழைத்தது யூதா கோத்திரம் அடிமை பெண்கள் பெற்றெடுத்த கோத்திரத்துக்கு ஒரு முழு சுதந்திரம் கொடுக்கவில்லை.

தாண் கோத்திரத்தை குறித்து கர்த்தர் யாக்கோபு மூலம்  சொன்னது,

ஆதியாகமம்: 49:17,18

தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பான்.

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.

நாம் அபிஷேகம் பெற்று தேவனுடைய வேலைக்காக தேவன் நம்மளில் நிறைவேற்றுகிற ஆசாரிப்பு கூடார வேலைக்கு திருஷ்டாந்தப்படுத்தினது பெசலெயேல் மற்றும் அகோலியாமை இந்த பெசலெயேல் என்பது நம் இரட்சிப்பின் ஆத்துமா ஆனால் கர்த்தருடைய ஆசரிப்பு கூடார வேலை நாம் சத்தியத்தின் பிரகாரம் செய்ய வேண்டும் என்று முன்னேறி போகும் போது நம்மை தள்ளியிடுகிற ஒரு அனுபவம் தான் தாண் கோத்திரம் அதிலிருந்து நாம் மீண்டும் ரட்சிக்கப்பட்டு முன்னேற வேண்டும் என்பதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   இது என்னவென்றால் நம் ஆத்துமா ஆவியில் உயிர்பிக்கப்பட்டால் மாம்சம் நம்மை கீழே தள்ளி விடும்.   அவ்விதம் வராதபடி நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து முன்னேற வேண்டும்.

நாம் ஆசரிப்பு கூடாரமாக பரிசுத்தமாக இருக்க நம்மை ஒப்புக் கொடுக்கும் போது எங்கேயோ நாம் விழுகிறோமென்றால் உடனே நம்மில் ஏதோ மாமிச கிரியைகள் வந்தது என்று நம்மை நாமே சோதித்து இரட்சிப்புக்காக காத்திருந்து பெற்றுக் கொண்டு மீண்டும் தேவனுடைய வேலையை செய்ய முன்வர வேண்டும்.    ஒப்புக்கொடுப்போம்.     ஜெபிப்போம். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசிர்வதிப்பார்.     

  -தொடர்ச்சி நாளை.