தேவனுக்கே மகிமையுண்டாவதாக 

நீதிமொழிகள் 16:17-18

தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்கு சமனான பாதை: தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். 

அழிவுக்கு முன்னானது அகந்தை: விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.    அல்லேலூயா. 

நம் ஆத்மாவின் வளர்ச்சியில் விழுவது ஏன்? விழாதபடி பாதுகாப்போம், சிந்திப்போம் :

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் கர்த்தர் நம்மை அபிஷேகித்து அவருடைய வேலைக்காக நம்மை அழைக்கிற அழைப்பும் அந்த அழைப்பின் இடையில் வீழ்ந்து போகிறதின் காரணம் என்ன என்றும் தியானித்தோம்.   வீழ்ந்து போகும் தருணத்தில் நாம் எங்கே விழுந்தோம் என்று நினைத்து நம்மை புதுப்பித்து மீண்டும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார். 

இஸ்ரவேல் விழுவது குறித்து கர்த்தர் ஆமோஸ் தீர்க்கதரிசிக்கு தரிசனத்தில் சொல்லுகிறது. 

ஆமோஸ் 5:1-7

இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக் குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள். 

இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள்.    அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள். தன் தேசத்தில் விழுந்து கிடக்கிறாள்.    அவளை எடுப்பாரில்லை.                                                                நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார். 

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்கிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள். 

பெத்தேலைத் தேடாதேயுங்கள்.   கில்காலிலும் சேராதேயுங்கள். பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்.     ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும். 

கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.    இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும். 

நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையில் விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள்.

பிரியமானவர்களே யார் ஆத்மீக வாழ்வில் விழுந்து போகிறது என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே அலசி ஆராய வேண்டும்.     இஸ்ரவேல்  என்னும் கன்னிகை  விழுந்து கிடக்கிறாள்  என்றால் நம்  ஆத்துமாவாகிய மணவாட்டி சபை எப்படி விழுகிறாள் என்றால் ஆத்துமா தான் இச்சிக்கிறதான  உலக,  மாமிச  சிந்தையாகிய காரியங்கள் நிமித்தமாக என்னவென்றால் தேவனால் இரட்சிப்பை  பெற்றும், அவருக்கு காத்திருக்காமல் தங்கள் வாழ்க்கையில் பாரம்பரியமாய் தங்கள் பிதாக்கள் நடந்துக்கொண்ட பாதையில் உலகத்தோடு ஒட்டி வாழ்கிறார்கள் மற்றும் தேவனையும் தேடுகிறார்கள். அதில் சில பேர் பெத்தேல் கில்கால், பெயர்செபா என்று தாங்கள் முக்கியமான இடத்திற்கு என்று இப்படிப்பட்ட பெயரை போடுகிறார்கள். பாரம்பரியம் நம் உள்ளத்தில் இருக்குமானால் இந்த இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் இந்த இடங்களின் பெயர்கள் எல்லாம் தேவன் நமக்கு திருஷ்டாந்த படுத்தியதேயல்லாமல் இவையெல்லாம் கர்த்தர் என்று நினைத்துக் கொள்ளாதிருங்கள்.     இப்பேர்பட்ட இடம் இனி நம் உள்ளத்தில் கிரியைகளில் எழும்பாதபடி கர்த்தர் என்பது அந்த நாமம் என்று எழும்ப வேண்டும்.     அதனால் தான் கர்த்தர் சொல்கிறார் அவையெல்லாம் சிறையிருப்பாகவும் பாழான ஸ்தலமாகவும் போகும். 

இப்படிப்பட்டவர்கள் நியாத்தை எட்டியாக மாற்றி, நீதியை தரையிலே விழப்பண்ணுகிறவர்கள்.    இவர்களிடம் தேவன் சொல்கிறது கர்த்தரை தேடுங்கள்.    அப்பொழுது பிழைப்பீர்கள் மேலும் பெயரிடப்படுகிறது மட்டுமல்ல முந்தின நாட்களில் பிதாக்கள் செய்த அக்கிரமத்தையும் செய்கிறோம்.     ஆனால் நாம் தேவனிடத்தில் நம்மை ஒப்புக்கொடுத்தால் அந்த அக்கிரமம் பாவம் எல்லாவற்றையும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து சிலுவையில் சுமந்து தீர்த்தார்.     இப்போது அந்த இடம், நாள் எல்லாமே கிறிஸ்து ஒருவரே என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். 

நம் ஆத்துமா ஒரு போதும் விழுந்து விடாதபடி காத்துக் கொள்ள வேண்டும்.  உலகம், இச்சை, மாம்ச சிந்தை இவற்றின் நினைப்புகள் நம் உள்ளத்தில் உருவாகுமானால் நாம் வீழ்ந்து போவோம் என்பதில் மாற்றமில்லை.    நாம் வீழ்வதை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம்.    உலகத்தார் நடக்கிற வேஷத்தில் நடப்போம் மேலும் நம்முடைய தின தியானம், குறையும், ஜெபவேளை  நேரம் குறையும் மற்றும் ஆகாத காரியங்களில் நேரத்தை செலவழிப்போம்.     நம்முடையை ஆசீர்வாதங்களையும் ஆகாதவைகளுக்காக செலவழிப்போம் இதனை வாசிக்கிற அன்பானவர்களே ஒவ்வொரு வரும் தங்களை சோதித்து அறிந்து கொண்டு நாம் சீர் செய்து கொண்டால் மிகவும் நன்மையாக இருக்கும். 

மேலும் தானியேல் ஊலாய் ஆற்றங்கரையிலே இருந்ததாக ஒரு தரிசனம் காணும் போது இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுகடாவை காண்கிறான்.  இரண்டு கொம்புகளுள்ள ஆட்டு கடாவின் ஒரு கொம்பு மற்ற கொம்பை காட்டிலும் உயர்ந்திருந்தது, அது பிந்தி முளைத்த கொம்பாயிருந்தது எந்த மிருகமும் முன்பு நிற்க கூடாதிருந்தது.    அந்த ஆட்டு கடா தன் இஷ்ட பிரகாரம் வல்லமை கொண்டது.     அடுத்து பார்க்கும் போது வெள்ளாட்டு கடா நிலத்தில் கால் பாவாமல் வேகமாக தேசத்தின் மீதெங்கும் சென்ற போது அதின் கண்களுக்கு நடுவே ஒரு விசேஷித்த கொம்பு இருந்தது. 

இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுகடாவுக்கு எதிராக  தன் பலத்தின் உக்கிரகத்தோடே  பாய்ந்தது. ஆட்டுக்கடாவை கோபத்தோடு  முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டு; தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது, அதின் கைக்கு ஆட்டு கடாவை தப்புவிப்பார் இல்லை. 

பின்பு வெள்ளாட்டு கடா  மிகுதியும் வல்லமைக்  கொண்டு பலங்கொண்டிருக்கையில், அந்த பெரிய கொம்பு முறிந்து போயிற்று அப்போது அதற்கு பதிலாக ஆகாயத்தின் நான்கு திசைகளுக்கும் எதிராக நான்கு விசேஷித்த  கொம்புகள் முளைத்தெழும்பினது   அவைகளின் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு தெற்குக்கும் கிழக்குக்கும் எதிராகவும் சிங்காரமான  தேசத்துக்கும் நேராகவும் மிகவும்  பெரிதாயிற்று. 

தானியேல் 8:10-11 

அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்தது, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சி

லவற்றைப் பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. 

அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று. அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. 

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்கள் நாம் தியானிக்கும் போது உலக ராஜ்யங்கள் அதின் அதிகாரங்கள் நம் உள்ளத்தில் வலுவடைவது,  உலகத்தின் ராஜாக்களின் ஆவி (இராட்சத ஆவி) வலுமை பெறுவதும் இவ்விதமாக இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா,  பெர்சியா  ராஜக்களின் கிரியைக்கும் (மாம்ச பெலம்) ரோமமுள்ள வெள்ளாட்டுக்கடா கிரேக்கு  தேசத்தின் ராஜாவின் கிரியைக்கும் (உலகத்தின் ஆவி) அந்த பெரிய கொம்பு (முதலாம் ராஜா) என்றும் தேவன் திருஷ்டாந்தப்படுத்தி நம் ஆத்துமாவின்  பெலன் மாம்சத்தோடும்,  உலகக்கிரியைகளோடும் ஓட்டி இருக்குமானால் நாம் விசுவாசத்தில் பெலவீனர்கள்,  அப்படியானால் இவர்கள் எல்லாம் நம்மை கீழே விழ தள்ளுகிறார்கள்.  அதைக்  குறித்து தான்,  அது வானத்தின் சேனைபரியந்தம்  வளர்ந்து, அதின் சேனையாகிய  நட்சத்திரங்களில் சிலவற்றைக் கீழே பூமியிலே விழப்பண்ணி  அவைகளை மிதித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரியமானவர்களே நாம் தான் அந்த நட்சத்திரம் ஆனால் நாம் தேவனுடைய நட்சத்திரமாகயில்லாமல் இருந்தால்  சத்துரு மேற் கொள்ளுகிறான்.  அதனால் தான் சேனையினுடைய அதிபதியாய் தேவன் மட்டும் தன்னை உயர்த்தி அவரிடத்திலிருந்து அன்றாட பலியை (நம் தின  தியானத்தை) நீக்கிற்று  அப்போது தேவனுடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது என்று பார்க்கிறோம்.     இவ்விதம் இராட்சத ஆவிகள் நம்மை கீழே விழ தள்ளுகிறது.      அதிலிருந்து நாம் எப்படி விடுதலையாவோம் என்று அடுத்த நாளில் தியானிப்போம்.    நாம் விழாதபடி பாதுகாக்க நம்மை ஒப்புக் கொடுப்போம்.    ஜெபிப்போம்.    கர்த்தர்  யாவரையும் தாராளமாய்  ஆசீர்வதிப்பார்.              -தொடர்ச்சி நாளை.