தேவன் நம் உள்ளத்தில் உலவுகிறார்:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Nov 02, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம்: 25:20

என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,  ஆமென்.      அல்லேலூயா.

தேவன் நம் உள்ளத்தில் உலவுகிறார்:-

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப் பகுதியில் நம் ஆத்துமா விழுந்து போவது எதனால் என்றும் விழுந்து அழிந்து போகாத படி நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் தியானித்தோம்.       மேலும் நம் உள்ளத்தின் ஆத்துமாவில் நடக்கிற யுத்தம் என்ன என்றும், யுத்தத்தை நாம் கிறிஸ்துவினால் மேற்கொண்டு கிறிஸ்து ஜெய வீரராக போர் புரிந்தால் மாத்திரமே நமக்கு ஆத்மீக வாழ்க்கையில் விடுதலையும் வெற்றியும் உண்டு.       அவ்விதம் ஜெய கிறிஸ்து ஜெயிக்கிறவராக நம் உள்ளத்தில் எழுந்தருள வேண்டும்.  அவர் எப்படி எழுந்தருளி வருகிறாரென்றால் நம் உள்ளத்தில் உள்ள உலகத்தின் ராஜ்யங்கள் மற்றும் அந்த ராஜ்யத்தின் ராஜாக்கள் நம் உள்ளத்தில் அதிகாரம் எடுக்கிறதினால் நம் தேவ வசனம் உள்ளத்தில் கடந்து போகும் போது, அந்த இராட்சத பிறவிகளாகிய இராட்சத ஆவி (நம் முன் பிதாக்களுடைய கிரியைகள்) பொல்லாத பழக்க வழக்கங்கள் மேலும் நாம் கழிந்த நாளில் தியானித்த நம்முடைய துர்குணங்கள் எல்லாம் பெலப்பட்டு வசனமாகிய கிறிஸ்துவோடு யுத்தம் செய்யும்.       அந்த யுத்தம் கிறிஸ்து ஜெயித்து ஜெய வீரராக அருணோதயம் போல் நம் உள்ளத்திலிருந்து அவர் புறப்பட வேண்டுமானால் தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து அதனை ஏற்றுக் கொண்டு நாம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.       அது என்னவெனில் கழிந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தியானித்த தேவ வசனம் பிதாவாகிய தேவனுடைய கரத்தில் ஒரு புஸ்தகம்.     இந்த புஸ்தகம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்தது.      இந்த புஸ்தகம் திறப்பதற்கும் அதை பார்க்கவும் பாத்திரவான் யாருமே இல்லாதிருந்தது.    யூத  கோத்திரத்து சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தை திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளை உடைக்கவும் ஜெயம் கொண்டிருந்தார்.

பிரியமானவர்களே நம் இருதயத்தை திறக்கவோ, பார்க்கவோ யாராலும் முடியாது.      யூத ராஜ சிங்கமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டும் தான் அதனை திறக்கவோ பார்க்கவும் முடியும். ஆனால் நம் இருதயத்தை எதையும் அவருக்கு முன்பாக மறைத்து வைக்க முடியாது.      நாம் இருதயத்தின் அந்தரங்களையும் ஒன்று விடாதபடி சோதித்து ஆராய்ந்தறிபவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவர் எவ்விதத்தில் ஆராய்ந்தறிகிறார் என்றால்,

எபிரெயர்: 4:12,13

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.

அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

நம் இருதயத்தின் நினைவுகள், சிந்தனைகள் எல்லாமே அவர் பார்க்கிறது அவருடைய வார்த்தையை அனுப்பி தான் செய்கிறார். அந்த வார்த்தை தான் கிறிஸ்து வசனம் (தேவ மகிமை).

அவற்றை குறித்து தான் தேவன்  யோவானுக்கு பத்மு தீவிலே வெளிப்படுத்துகிறது என்னவென்றால், ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு என்று எழுதப்பட்டிருப்பது நம் ஆத்துமாவைக் குறித்து என்பதும் நம்முடைய ஆத்துமாவின் இரட்சிப்புக்காக தேவன் நம் உள்ளான மனுஷனில் கிரியைகளை நடப்பித்து நம் ஆவி, ஆத்துமா, சரீரம் பரிசுத்தமாக்கபடுவதற்காக மனந்திரும்புதலை அருளும் படியாக ஒவ்வொரு பிரிய ஜனங்களும் இவற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்து,

வெளிப்படுத்தல்: 1:3

இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக் கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.

யோவான் கண்ட தரிசனத்தில் தேவன் நம் உள்ளத்தில் உலாவுகிறார் என்பதையும் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏழு வித தோற்றங்களில் தேவனுடைய கையில் ஏந்தினவராக காணப்படுகிறார் என்பதையும் அவர் நம் உள்ளத்தை எவ்விதம் ஆராய்ந்து எந்தக் காரியத்தில் விழுந்து கிடக்கிறோம் என்பதை குறித்து தேவன் பேசுகிறார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் ஆத்துமாவாகிய மணவாட்டி சபையோடு ஒப்புரவாக்கி, நம் உள்ளத்தில் என்ன குறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி அதிலிருந்து மனந்திரும்பும்படி சொல்கிறார். அதனை குறித்து,

வெளிப்படுத்தல்: 1:11

அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.      நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

பிரியமானவர்களே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை ஏழு பட்டணங்களாக பிரித்து இந்த ஏழு பட்டணங்களில் உள்ள பொல்லாத, நல்ல குணங்கள் என்ன என்பதை கண்டறிந்து நம்  உள்ளத்தில் எந்த இடத்தில் என்ன சுபாவம் இருக்கிறது என்பதை சோதித்து அறிந்து அதிலிருந்து பொல்லாத குணங்களை மாற்றி நாம் மனந்திரும்பி ஒரு பரலோக ராஜ்யமாக மாற வேண்டுமென்பதற்காக தேவன் யோவானுக்கு பத்மு தீவில் வெளிப்படுத்துகிறார்.        நம் ஆத்துமா இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுவிட்டு தேவனிடத்தில் ஒப்புக் கொடுத்து அவரோடே ஐக்கியப்பட்டு மனந்திரும்பி உடன்படிக்கை எடுத்த பிறகு எந்த இடத்தில் விழுகிறோம் என்று கண்டறிகிறார். தேவன் நம் நடுவில் உலாவிக் கொண்டிருக்கிறார்.      அவற்றை குறித்து,

ஆதியாகமம்: 3:8

பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக் கொண்டார்கள்.      இவை நமக்காக திருஷ்டாந்தபடுத்துகிறார்.

பிரியமானவர்களே நாம் தான் இந்த ஏதேன் தோட்டம்.      அந்த தோட்டத்தில் தேவன் அவருடைய சித்தமான நேரத்தில் உலாவுகிறார். அப்போது நம்மை சோதித்துப் பார்க்கும் போது நம் உள்ளத்தில் உள்ள தோற்றங்கள் (இச்சைகள்) இன்னும் தேவனுக்கு பிரியமில்லாத காரியங்கள் இருக்குமானால் ஆதாம் - ஏவாள் போல நாம் நிர்வாணிகளாகயிருக்கிறோம் இதனை குறித்து தேவ வசனத்தில் அநேக இடங்களில் உலக பெருமை, இச்சைகள், அலங்காரங்கள் மற்றும் பொல்லாத குணங்கள் இவ்விதம் உள்ளவர்களிடத்தில் வஸ்திரம் இல்லை அவர்கள் நிர்வாணிகள் என்று on कोசொல்லப்படுகிறது.        நம்முடைய நிர்வாணம் காணப்படாத படி நாம் பாதுகாத்துக் கொள்ளும் படியாகவே அவர் நம் உள்ளத்தில் உலாவி நம்மை சீர்திருத்தி மனந்திரும்பும் படியாகவே தேவன் நம்மோடு தேவ வசனம் மூலம் சொல்கிறார்.      நம் தேவன் நம் உள்ளத்தில் எவ்விதம் உலாவுகிறார் என்று அடுத்த நாளில் தியானிப்போம்.       நம் நிர்வாணம் காணப்படாத படிக்கு ஜாக்கிரதையாக இருப்போம்.     பரிசுத்தமாக்க படுவோம்.       ஒப்புக் கொடுப்போம் .      ஜெபிப்போம்.       கர்த்தர் யாவரையும் தாராளமாக ஆசீர்வதிப்பார்.            

-தொடர்ச்சி நாளை